தொடர் உயர்வில் தங்கம் விலை..! 

வாரத்தின் 2 ஆவது வர்த்தக  தினமான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று  உயர்ந்து  உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது தங்கம் விலை. இதன் காரணமாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். 

மேலும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியும் 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதால் தங்கத்தின் விலை அதிகரித்தே காணப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, தங்கம் விலை சற்று உயர்வு கண்டு உள்ளது.

காலை நேர நிலவரப்படி, 

22 கேரட் ஒரு  கிராம் 5 ரூபாய் உயர்ந்து - 3338.00 ரூபாயாக  உள்ளது. அதன் படி சவரன் ரூபாய் 26 ஆயிரத்து 704 ரூபாயாக  உள்ளது. 

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு  கிராம் வெள்ளி 10 பைசா உயர்ந்து 44.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.