Asianet News TamilAsianet News Tamil

gold rate today: தங்கம் வாங்க, பொன்னான நேரம்! சவரன் ரூ.36ஆயிரத்தை தொடுகிறது: இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது சாமானிய, நடுத்தர மக்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். தொடர்ந்து 2வது நாளாக தங்கம்விலை இன்றும் குறைந்துள்ளது. 

gold rate is continuously falling straight 2nd day: check chennai, kovai, vellore, trichy price
Author
Chennai, First Published Jul 16, 2022, 9:55 AM IST

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது சாமானிய, நடுத்தர மக்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். தொடர்ந்து 2வது நாளாக தங்கம்விலை இன்றும் குறைந்துள்ளது. 

சென்னையில் இன்று காலை நிலவரப்படி,  தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 9ரூபாயும், சவரணுக்கு 72 ரூபாயும் குறைந்துள்ளது.  

gold rate is continuously falling straight 2nd day: check chennai, kovai, vellore, trichy price

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,636க்கும், சவரண் ரூ.37,088க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.9 விலை குறைந்து, ரூ4,627 ஆகவும், சவரணுக்கு ரூ.72 வீழ்ச்சி அடைந்து ரூ.37,016க்கும் விற்கப்படுகிறது.

கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4627ஆக விற்கப்படுகிறது. 

தங்கத்தின் விலை தொடர்ந்து தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிந்துள்ளது.  கடந்த வாரங்களாகவே தங்கத்தில் விலையில் கடும் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது சவரனுக்கு ரூ.2ஆயிரம் வரை குறைந்துள்ளது.

gold rate is continuously falling straight 2nd day: check chennai, kovai, vellore, trichy price

சாமானிய மக்கள், நடுத்தர குடும்பத்தினர் தங்கம் வாங்குவதற்கு இது சரியான நேரமாகும். ஏறக்குறைய தங்கம் விலை சவரன் ரூ.36ஆயிரத்தை தொட்டுவிட்டது. கடந்த 15 நாட்களுக்கு முன்புவரை சவரன் ரூ.38ஆயிரத்துக்கும் மேல்இருந்தநிலையில் தற்போது 2ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. 
விலை குறையலாம்

அமெரிக்காவில் பணவீக்கம் கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவு 9.1 சதவீதமாக உயர்ந்துவிட்டது. அதிகரி்த்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் வங்கி இந்த மாத இறுதியில் மீண்டும் 75 புள்ளிகள் வரை வட்டியை உயர்த்தும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.   

gold rate is continuously falling straight 2nd day: check chennai, kovai, vellore, trichy price

ஒருவேளை வட்டி உயர்த்தப்பட்டால், டாலர் மதிப்பு மேலும் வலுப்பெறும், பல்வேறு நாட்டு கரன்ஸிகளின் மதிப்பும் நெருக்கடிக்குள்ளாகும். 

டாலர் மதிப்பு அதிகமாகும்போது, டாலரில் வாங்கும் தங்கத்தின் இறக்குமதியை குறைக்க வேண்டிய நிலைக்கு பல நாடுகள் தள்ளப்படும்.  இதனால், சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை, முதலீடு குறைந்து விலையும் வரும் நாட்களில் மேலும் குறையலாம் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். 

தங்கம்  இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளதும் தங்கம் விலை குறைவுக்கு காரணியாகக் கொள்ளலாம்.

gold rate is continuously falling straight 2nd day: check chennai, kovai, vellore, trichy price

வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 40 காசு  அதிகரித்து, ரூ.60.70க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.300உயர்ந்து ரூ.60,700க்கு விற்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios