மீண்டும் திடீரென உயர்ந்தது தங்கம் விலை..!  

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் தொடர் ஏறுமுகம் இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் தற்போது தங்கம் விலையில் சற்று குறைவு எற்பட்டு உள்ளது

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 3316 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 26 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி விலை கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, கிராம் 41.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலையில் அவ்வப்போது, விலை ஏறுவதும் இறங்குவதுமாகவும் உள்ளது. ஆனாலும், சவரன் விலை 26 ஆயிரம் ரூபாயிலிருந்து குறைந்த பாடில்லை.