கடந்த சில நாடகளாகவே தங்கத்தின் விலையில் தொடர் ஏறுமுகம் இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

சரசரவென உயர்ந்த தங்கம் விலை..! 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த சில நாடகளாகவே தங்கத்தின் விலையில் தொடர் ஏறுமுகம் இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் சமீபத்திய மத்திய பட்ஜெட்டிலும் தங்கத்தின் மீதான வரி 10 % இருந்து 12.5 % சதவீதமாக உயர்வு செய்யப்பட்டு உள்ளதால், சவரனுக்கு ரூ.560 வரை உயர வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து 3288 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்து 26 ஆயிரத்து 304 ரூபாய்க்கு விற்பனையானது.

மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 3,303 ரூபாயாக உள்ளது. அதன் படி சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து உள்ளது. ஆக இன்று ஒரே நாளில், சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்து, தற்போது சவரன் ரூ.26 ஆயிரத்து 424 க்கு விற்கப்படுகிறது

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி விலையில் 20 பைசா அதிகரித்து கிராம் 41.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.