MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இனி குடும்பத்துடன் டி.வி-யில் இன்ஸ்டா ரீல்ஸ் பார்க்கலாம்... மெட்டாவின் 'இன்ஸ்டாகிராம் ஃபார் டிவி' சிறப்பம்சங்கள் என்ன?

இனி குடும்பத்துடன் டி.வி-யில் இன்ஸ்டா ரீல்ஸ் பார்க்கலாம்... மெட்டாவின் 'இன்ஸ்டாகிராம் ஃபார் டிவி' சிறப்பம்சங்கள் என்ன?

மும்பையில் நடைபெற்ற 'ஹவுஸ் ஆஃப் இன்ஸ்டாகிராம்' நிகழ்வில், 'இன்ஸ்டாகிராம் ஃபார் டிவி' (Instagram for TV) செயலி அடுத்த சில நாட்களில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Nov 29 2026, 05:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
குடும்பத்துடன் டி.வி யில் ரீல்ஸ் பார்க்க இன்ஸ்டாகிராம் ஃபார் டிவி!
Image Credit : x

குடும்பத்துடன் டி.வி-யில் ரீல்ஸ் பார்க்க இன்ஸ்டாகிராம் ஃபார் டிவி!

இன்ஸ்டாகிராமில் நகைச்சுவையான ரீல்ஸ் வீடியோக்களைப் பார்க்கும்போது, அதை அருகில் இருப்பவர்களுக்கும் காட்டி ஒன்றாகச் சேர்ந்து சிரிக்க வேண்டும் என்று தோன்றுவது இயல்பு. அதற்காக ஒவ்வொருவரிடமும் செல்போனைக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை இனி இருக்காது. வீட்டின் ஹாலில் அமர்ந்து, பெரிய தொலைக்காட்சித் திரையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் பார்க்கும் புதிய அனுபவத்தை மெட்டா நிறுவனம் இந்தியாவிற்குக் கொண்டு வருகிறது. மும்பையில் நவ.27-ம் தேதி நடைபெற்ற 'ஹவுஸ் ஆஃப் இன்ஸ்டாகிராம்' (House of Instagram) நிகழ்வில், 'இன்ஸ்டாகிராம் ஃபார் டிவி' (Instagram for TV) செயலி அடுத்த சில நாட்களில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக மெட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
எந்தெந்த டி.வி-க்களில் செயல்படும்?
Image Credit : x

எந்தெந்த டி.வி-க்களில் செயல்படும்?

தனித்தனியாக செல்போன் திரையில் மூழ்கிப் போகும் குறுகிய கால வீடியோக்களை, குடும்பத்துடன் பகிர்ந்து பார்க்கும் பொழுதுபோக்காக மாற்றுவதே இதன் நோக்கம். ஆப்பிள் டிவி (Apple TV), அமேசான் ஃபயர் டிவி (Amazon Fire TV) மற்றும் கூகுள் டிவி (Google TV) ஆகிய சாதனங்களில் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த வீடியோக்களைத் தனிப்பட்ட முறையில் பார்க்க, ஒரே டி.வி செயலியில் 5 இன்ஸ்டாகிராம் கணக்குகள் வரை இணைத்துக்கொள்ளலாம். விரும்பினால் தொலைக்காட்சிக்கெனப் பிரத்யேகக் கணக்கையும் தொடங்கிக்கொள்ள முடியும்.

34
செல்போன் செயலியிலிருந்து எப்படி மாறுபடுகிறது?
Image Credit : x

செல்போன் செயலியிலிருந்து எப்படி மாறுபடுகிறது?

தொலைக்காட்சி ரிமோட் மூலமாகவே எளிதாகக் கையாளும் வகையில் இதன் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. செல்போனில் விரலால் தள்ளி (Scroll) வீடியோக்களை மாற்றுவது போல் அல்லாமல், டி.வி-யில் ரீல்ஸ் வீடியோக்கள் தானாகவே ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து ஒளிபரப்பாகும் (Auto-play). பயனர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப வீடியோக்களை வரிசைப்படுத்த 'சேனல்கள்' (Channels) என்ற வசதியும், நண்பர்கள் பகிரும் மற்றும் விரும்பும் வீடியோக்களை ஒரே இடத்தில் காட்ட 'ஃப்ரெண்ட்ஸ் டேப்' (Friends tab) வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியப் பயனர்களுக்காக அகலத்திரையில் (Widescreen) பார்க்கும் வகையிலான கிடைமட்ட ரீல்ஸ் (Horizontal Reels) வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் கரோசல் பதிவுகளுக்கும் ஆதரவு உண்டு. மேலும், செல்போன் மற்றும் டி.வி ஒரே வைஃபை (Wi-Fi) இணைப்பில் இருந்தால், செல்போனில் பார்க்கும் ரீல்ஸை நேரடியாக டி.வி திரைக்கு 'காஸ்ட்' (Cast) செய்தும் பார்க்கலாம்.

44
பதின்ம வயதினருக்கான பாதுகாப்பு கட்டுப்பாடுகள்
Image Credit : x

பதின்ம வயதினருக்கான பாதுகாப்பு கட்டுப்பாடுகள்

குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், உள்ளடக்கத் தரநிலைகளில் மெட்டா கூடுதல் கவனம் செலுத்தி உள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரீல்ஸ் பொதுவாக 13+ கண்டெண்ட் மதிப்பீட்டு (13+ Content Ratings) விதிகளைப் பின்பற்றும். 18 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரின் (Teen Accounts) பாதுகாப்புக்காகக் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் டி.வி செயலியிலும் தொடரும்.

குறிப்பாக, பதின்ம வயதினர் தொலைக்காட்சியில் இன்ஸ்டாகிராம் பார்க்கும் நேரமும் அவர்களின் தினசரி பயன்பாட்டு வரம்பில் (Usage limits) கணக்கிடப்படும். குறிப்பிட்ட நேரத்தை எட்டியதும் நினைவூட்டல் மற்றும் தூக்க முறை அறிவிப்புகள் (Sleep mode notifications) டி.வி திரையிலும் தோன்றி அவர்களை எச்சரிக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொழில்நுட்பம்
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
சாமானியர்களுக்கு அடுத்த பேரிடி: 55 மில்லியன் டன் கையிருப்பு இருந்தும் எகிறும் அரிசி விலை; அதிர்ச்சி பின்னணி என்ன?
Recommended image2
ரூ.5 லட்சம் போதும்! மாதம் ரூ.3,083 பாக்கெட் மணி.. 5 ஆண்டுகளுக்கு ஜாக்பாட் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்
Recommended image3
Property Registration New Rules 2026: தமிழகத்தில் புதிய பத்திரப்பதிவு திட்டம்.! வீடு தேடி வரும் சொத்து பத்திரம்!
Related Stories
Recommended image1
48 மணி நேர பேக்கப், கண்ணாடி டிசைன்: மிரட்டலான அம்சங்களுடன் களமிறங்கிய புதிய JBL இயர்பட்ஸ்!
Recommended image2
டால்பி அட்மாஸ், சப்வூஃபர், பேஸ்: உங்க வீட்டிற்கு ஏற்ற ஆடியோ சிஸ்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved