தங்கம் விலை அதிரடி உயர்வு..! 

தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாத காலமாகவே தங்கம் விலை அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 30 ஆயிரத்தை தாண்டி விடுகிறது. அதில் செய் கூலி, சேதாரமும் அடங்கும். அதேவேளை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 25 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கம் விலை தற்போது 27 ஆயிரம் ரூபாயை நெருங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி தங்கம் சற்று உயர்வு கண்டுள்ளது. அதன்படி கிராமிற்கு 11 ரூபாய் அதிகரித்து, 3,335 ரூபாயாக  உள்ளது. அதாவது சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து, 26 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்

கிராமிற்கு10 பைசா அதிகரித்து 44.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.