தங்கம் விலை கிடு கிடு உயர்வு..! 

ஒரே நாளில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு சென்னையில் நேற்று பவனுக்கு ரூபாய் 144 உயர்ந்து, ரூபாய் 24 ஆயிரத்து 312 க்கு விற்பனை செய்யப்பட்டது. 

சர்வதேச அளவில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது.

22 கேரட் ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 39 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூபாய் 3 ஆயிரத்து 21க்கு விற்கப்பட்டது. அதாவது கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு பவுன் மீண்டும் 24 ஆயிரத்து 300 ரூபாயைக் கடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு கொண்டுள்ளதால், வியாபாரத்தில் சற்று சரிவு ஏற்பட்டு உள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 3059.00
ஒரு கிராம் வெள்ளி - 42.30  என்பது குறிப்பிடத்தக்கது.