சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு..! 

மாலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி பார்க்கலாம். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. இந்நிலையில் இன்று நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்று வருகிறது. 

தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக பங்குச் சந்தைகளும் உயர்வுடன் காணப்படுகின்றன. அதில் குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனமும் அதானி குழுமமும் தொடர்ந்து அதிக முதலீடுகளை ஈர்த்து உள்ளது. இதன் எதிரொலியாக தங்கத்தின் மீதான முதலீடு சற்று குறைந்து இருந்தது.

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய காலை நேர நிலவரப்படி, சவரனுக்கு ரூ.72 குறைந்து 24 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போன்று வெள்ளி விலையிலும் 20 காசுகள் குறைந்து 39 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆனால், மாலை நேர நிலவரப்படி, 

22 கேரட் ஆபரண தங்கம்..! 

22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து 3026 ரூபாய்க்கும், சவரன்  24 ஆயிரத்து 208 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையில், கிராமுக்கு 30 பைசா குறைந்து, 39.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.