gold rate in chennai: gold rate today :ஆபரணத் தங்கத்தின் விலை இன்று  திடீரென எதிர்பாராத அளவு உயர்ந்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு 25 ரூபாயும், சரணுக்கு 200 ரூபாயும் ஏற்றம் கண்டுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென எதிர்பாராத அளவு உயர்ந்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு 25 ரூபாயும், சரணுக்கு 200 ரூபாயும் கிடுகிடுவென ஏற்றம் கண்டுள்ளது.

முகூர்த்த நாட்கள் வருவது, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றால் கடந்த சில நாட்களாக தங்கத்தின்விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வந்தநிலையில் திடீரென அதிகரித்துள்ளது. 

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றுவரை கிராம் ரூ.4,700க்கும், சவரண் ரூ.38,160க்கு விற்பனையானது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.4,795 ஆகவும், சவரணுக்கு, ரூ. 200 உயர்ந்து, ரூ.38 ஆயிரத்து360க்கும் விற்பனையாகிறது. 

தங்கத்தின் விலை கடந்த மே 31ம் தேதி முதல் இன்றுவரை கிராமுக்கு ரூ.10 முதல் ரூ30 வரை மட்டுமே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

அமெரிக்கச் சந்தையில் கடன் பத்திரங்களுக்கு எதிராக டாலர் மதிப்பு உயரவில்லை என்பதாலும், இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக பெரிதாக சரிவைச் சந்திக்கவில்லை என்பதாலும் தங்கத்தின் விலையில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. 

வெள்ளி விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை, நேற்று தொடர்ந்த கிராம் ரூ.68 கிலோ ரூ.68,000 விலையிலேயே விற்பனையாகிறது.