Asianet News TamilAsianet News Tamil

தங்கம் விலை எதிரொலி! இப்படி விலை ஏறினா தலையில துண்டு போட்டு போக வேண்டியது தான்..!

22 கேரட் ஆபரண தங்கம் : கிராம் ரூ. 3571.00 (24 ரூபாய் அதிகரிப்பு) சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 568 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

gold rate hike reactions: people suffers a lot due to  gold rate  hike daily
Author
Chennai, First Published Aug 8, 2019, 7:01 PM IST

தங்கம் விலை எதிரொலி! இப்படி விலை ஏறினா தலையில துண்டு போட்டு போக வேண்டியது தான்..!  

தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வரும் இந்த தருணத்தில் ஒரு சவரன் தங்க விலை 29 ஆயிரத்தை நெருங்க உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். 

இன்று, காலை நேர நிலவரப்படி,  

22 கேரட் ஆபரண தங்கம் : கிராம் ரூ. 3571.00 (24 ரூபாய் அதிகரிப்பு) சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 568 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலையில் இது புதிய உச்சம் என்பது குரிப்பிடத்தக்கது.

இதே போன்று வெள்ளி விலையும் உள்ளது. அதன் படி, கிராம் ரூ. 47.90 ரூபாயாக உள்ளது 

gold rate hike reactions: people suffers a lot due to  gold rate  hike daily

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ .13 குறைந்து 3558.00 ரூபாயாக உள்ளது. அதன் படி, சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 464 ரூபாயாக உள்ளது.

ஏற்கனவே தங்கம் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், சவரன் விலை மிக விரைவில் 29 ஆயிரத்தையும் நெருங்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலையில், ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் செய்கூலி சேதாரம் என சேர்த்து, 33 ஆயிரம் ரூபாய் ஆகும் என்பது கூடுதல் தகவல். தங்கம் விலை ஏற்றம் காண்பதில் மட்டும் அதிகளவில் உயர்ந்து, குறைவில் மட்டும் சிறிய தொகை மட்டுமே குறைகிறது. இப்படியே தங்கம் விலை தொடர் உயர்வு கண்டால் தலையில துண்டு போட்டுகொண்டு போக வேண்டியது தான் என புலம்ப தொடங்குகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios