தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வரும் இந்த தருணத்தில் ஒரு சவரன் தங்க விலை 29 ஆயிரத்தை நெருங்க உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். 

இன்று, காலை நேர நிலவரப்படி,  

22 கேரட் ஆபரண தங்கம் : கிராம் ரூ. 3571.00 (24 ரூபாய் அதிகரிப்பு) சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 568 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலையில் இது புதிய உச்சம் என்பது குரிப்பிடத்தக்கது.

இதே போன்று வெள்ளி விலையும் அதிகரித்து உள்ளது. அதன் படி, கிராம் ரூ. 47.90 (1.10 ருபாய் அதிகரித்து உள்ளது)

ஏற்கனவே தங்கம் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், சவரன் விலை மிக விரைவில் 29 ஆயிரத்தையும் நெருங்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலையில், ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் செய்கூலி சேதாரம் என சேர்த்து, 33 ஆயிரம் ரூபாய் ஆகும் என்பது கூடுதல் தகவல்.