Asianet News TamilAsianet News Tamil

Gold Rate Today: தங்கம் விலை சற்று உயர்வு! சவரனுக்கு ரூ.80 ஏற்றம்: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை வாரத்தின் முதல்நாளான இன்று சற்று அதிகரித்துள்ளது.  தங்கம் விலை இன்று கிராமுக்கு 10ரூபாயும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது

Gold rate has  slightly increased: check price in chennai, kovai, trichy and vellore
Author
First Published Oct 17, 2022, 10:50 AM IST

தங்கம் விலை வாரத்தின் முதல்நாளான இன்று சற்று அதிகரித்துள்ளது.  தங்கம் விலை இன்று கிராமுக்கு 10ரூபாயும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது

ஏற்ற, இறக்கத்தில் தங்கம் விலை! குழப்பத்தில் நகைப்பிரியர்கள்!: இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,690 ஆகவும், சவரன், ரூ.37,520 ஆகவும் இருந்தது. 

இந்நிலையில் திங்கள்கிழமை (இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 10ரூபாய் அதிகரித்து, ரூ.4,700ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.37,600ஆக அதிகரித்துள்ளது. கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,700ஆக விற்கப்படுகிறது.

தங்கம் விலை மீண்டும் குறைவு! சவரனுக்கு ரூ.200 வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை வாரத்தில் பெரும்பகுதி நாட்கள் சரிவுடனே இருந்தது. கடந்த வாரத்தில் தங்கம், கிராமுக்கு ரூ.85 குறைந்து சவரனுக்கு ரூ.320 சரிந்தது. ஆனால், இந்த வாரத் தொடக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. பண்டிகைக் காலம் நெருங்குவதால் மக்கள் மத்தியில் தங்கம் வாங்கும் ஆசை அதிகரித்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் தங்கம் விலை உயரக்கூடும். 

அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இம்மாதம் 20ம்தேதி  கூடும் பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் வட்டிவீதம் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. அமெரி்க்காவில் வட்டிவீதம் உயர்த்தப்படும்போது, டாலர் மதிப்பு வலுப்பெற்று உலக நாடுகளின் கரன்ஸிகளின் மதிப்பு சரியத் தொடங்கும். இது இந்திய ரூபாய் மதிப்புக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும், தங்கத்தின் தேவையை சர்வதேச அளவில் குறைக்கும். 

தங்கம் விலை திடீர் வீழ்ச்சி! சவரனுக்கு ரூ.360 குறைவு: இன்றைய நிலவரம் என்ன?

இதனால் வரும் வாரங்களில் அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் தங்கம் விலையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும். 

வெள்ளி விலையும்  சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, ரூ.60.70 ஆகவும், கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.60,700 ஆகவும் விற்கப்படுகிறது
 

Follow Us:
Download App:
  • android
  • ios