gold rate today: ஏற்ற, இறக்கத்தில் தங்கம் விலை! குழப்பத்தில் நகைப்பிரியர்கள்!: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை கடும் ஊசலாடத்தில் இருந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக விலை சரிந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது.

gold price has barely changed: check rate in chennai, kovai, trichy and vellore

தங்கம் விலை கடும் ஊசலாடத்தில் இருந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக விலை சரிந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 10ரூபாயும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளதுசென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,730 ஆகவும், சவரன், ரூ.37,840 ஆகவும் இருந்தது. 

gold price has barely changed: check rate in chennai, kovai, trichy and vellore

5ஜியில் ஜியோ டாப் ஸ்பீடு! ஒரு மூவி டவுன்லோடுக்கு 85 வினாடிதானா! ஏர்டெல் காலி

இந்நிலையில் வியாழக்கிழமை (இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 10ரூபாய் அதிகரித்து, ரூ.4,740ஆக அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.80 அதிகரித்து, ரூ.37,920ஆக உள்ளது. கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,740ஆக விற்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.640 குறைந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. நாட்டில் செப்டம்பர் மாதப் பணவீக்கம் புள்ளிவிவரத்தில் 7.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் வரும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கைக் கூட்டத்தில் கடனுக்கான வட்டி அதிகரிக்கும் என்பது உறுதியாகிறது. 

gold price has barely changed: check rate in chennai, kovai, trichy and vellore

வெறும் ஒரு யூரோவுக்கு சொத்துக்கள் விற்பனை! ரஷ்யாவை விட்டு வெளியேறும் ஜப்பானின் நிசான் நிறுவனம்

அதேநேரம், அமெரிக்காவிலும் பணவீக்கம் குறையவில்லை. இதனால் இம்மாதம் இறுதியில் கூடும் பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் வட்டிவீதம் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. அமெரி்க்காவில் வட்டிவீதம் உயர்த்தப்படும்போது, டாலர் மதிப்பு வலுப்பெற்று உலக நாடுகளின் கரன்ஸிகளின் மதிப்பு சரியத் தொடங்கும். இது இந்திய ரூபாய் மதிப்புக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும், தங்கத்தின் தேவையை சர்வதேச அளவில் குறைக்கும். 

இதனால் வரும் வாரங்களில் அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் தங்கம்விலையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும். கடந்த 3 நாட்களாக விலை குறைந்துவருவது, நகை வாங்கும் நடுத்தர மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்தநிலையில் மீண்டும் உயர்ந்திருப்பது குழப்பத்தை அளித்துள்ளது.

gold price has barely changed: check rate in chennai, kovai, trichy and vellore

இந்தியாவுக்கு பாராட்டு!உலகப் பொருளாதார வளர்ச்சியை குறைத்தது செலாவணி நிதியம்(IMF)

வெள்ளி விலை சற்றுக் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.62.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.500 சரிந்து, ரூ.62,500 ஆகவும் விற்கப்படுகிறது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios