Gold Rate: தங்கம் விலையால் இன்ப அதிர்ச்சி! 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,350 சரிந்தது: வெள்ளி ரூ1,800 வீழ்ச்சி

Gold Rate today: தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக அதிரடியாகக் குறைந்துள்ளது. 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,350க்கு மேல் சரிந்துள்ளது. 

Gold rate has fallen for a second straight day! silver plunged: check price in chennai, coimbatore

Gold Rate today: தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக அதிரடியாகக் குறைந்துள்ளது. 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,350க்கு மேல் சரிந்துள்ளது. 

தங்கம் விலை வரலாறு காணாத அளவு சவரன் ரூ.44 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்தநிலையில் மளமளவென இருநாட்களாகக் குறைந்து வருகிறது

Gold rate has fallen for a second straight day! silver plunged: check price in chennai, coimbatore

:தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கியது! மக்கள் குழப்பம்! இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை இன்று கிராமுக்கு 80 ரூபாயும், சவரனுக்கு 640 ரூபாயும் விலை குறைந்துள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.140 சரிந்துள்ளது, சவரனுக்கு ரூ.1120 குறைந்துள்ளது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,415ஆகவும், சவரன், ரூ.43,320ஆகவும் இருந்தது.

Gold rate has fallen for a second straight day! silver plunged: check price in chennai, coimbatore

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(சனிக்கிழமை) கிராமுக்கு 80 ரூபாய் சரிந்து ரூ.5,335ஆகவும், சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ரூ.42 ஆயிரத்து 680 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,335க்கு விற்கப்படுகிறது.

பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் மளமளவென தங்கம் விலை அதிகரித்து வரலாற்றில் இல்லாத அளவாக சவரன் ரூ.44 ஆயிரமாக உயர்ந்துத. ஆனால், தங்கம்விலை நேற்றிலிருந்து குறையத் தொடங்கியுள்ளது. சவரன் ரூ.44 ஆயிரத்தில் இருந்து ரூ.42 ஆயிரத்துக்குள் சரிந்துவிட்டது. 
 கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை, சவரனுக்கு ரூ.1350வரை குறைந்துள்ளது நடுத்தர மக்கள்,நகைப் பிரியர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

Gold rate has fallen for a second straight day! silver plunged: check price in chennai, coimbatore

தங்கம் விலை வரலாற்று உச்சம் ! சவரன் ரூ.44 ஆயிரத்தை எட்டியது: மிடில் கிளாஸ் மக்கள் கலக்கம்

வெள்ளி விலையில் இன்று அதிரடியாக வீழ்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று நேற்று ரூ.76.00 ஆக இருந்தநிலையில் இன்று கிராமுக்கு 1.80 பைசா குறைந்து, ரூ.74.20ஆகவும்,  கிலோவுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.74,200 ஆகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

வெள்ளிவிலை கடந்த இரு நாட்களில் கிலோவுக்கு ரூ.3600 குறைந்துவிட்டது. கடந்த 2ம் தேதி வெள்ளி கிலோ ரூ.77,800 ஆக உயர்ந்தநிலையில் இன்று கிலோ ரூ.74,200 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. 
 
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios