கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சவரன் தங்கம் விலை 29 ஆயிரத்தை கடந்து விற்பதால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி கிளம்பி இருந்தது.

இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட தங்கம் வாங்குவது என்பது மக்களுக்கு என்றும் அத்தியாவசிய பொருளாக உள்ளது. திருமண நிகழ்ச்சி போன்ற பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது இந்தியர்களின் பழக்கம்.

எனவே எப்போதுமே தங்கத்தின் மீதான மோகம் மக்களுக்கு குறைய வாய்ப்பே இல்லை என்று கூட கூறலாம். அதே வேளையில் ஒரு பக்கம் தங்கத்தின் மீது விலை உயர்வு கிடு கிடு என உயர்ந்து வருகிறது. அப்படியே விலை குறைந்தாலும் மிக குறைந்த அளவில் தான் குறைகிறது
அந்த வகையில் இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ரூ.3601 ரூபாயாக உள்ளது.

அதாவது சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 808 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 10 பைசா குறைந்து 48.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.