காலை நேரத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்கப்பட்டு வந்த தங்கத்தின் விலையில் தற்போது சற்று சரிவு ஏற்பட்டு உள்ளது. 

சரிந்தது தங்கம் விலை..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காலை நேரத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்கப்பட்டு வந்த தங்கத்தின் விலையில் தற்போது சற்று சரிவு ஏற்பட்டு உள்ளது. அவ்வப்போது தங்கம் மீதான விலை ஏற்றத்தால்,சவரன் விலை ரூபாய் 27 ஆயிரம் தொட உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதற்கிடையில் தங்கம் இறக்குமதிக்கான விழுக்காடு 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு குறைவு என்றுதான் கருத்து நிலவி வருகிறது.

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் தங்கம் 3,331 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 26 ஆயிரத்து 648 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.

மாலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராம் தங்கம் 3,324 ரூபாயாகவும், சவரன் விலை 26 ஆயிரத்து 592 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது 

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 10 பைசா குறைந்து 44.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.