மாலை நேரத்தில் சரிந்த தங்கம் விலை..! 

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளதாலும், உள்நாட்டு இறக்குமதி வரியும் அதிகரித்து உள்ளதாலும் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சம் அடைந்து உள்ளது.

மேலும் கடந்த 2 மாத காலமாகவே ஒரு சவரன் தங்கம் விலை 27 ஆயிரத்தை நெருங்க உள்ளது. இந்த நிலையில் தங்கம் விலை ஏற்றம் காண்பதும் அவ்வப்போது குறைவதுமாக உள்ளது.

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி,  

ஒரு கிராமுக்கு ரூபாய் 13 ரூபாய் குறைந்து 3332 ரூபாயாக இருந்தது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 656 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மாலை நேர  நிலவரப்படி, 

ஒரு கிராமுக்கு ரூபாய்  2 ரூபாய் குறைந்து 3330 ரூபாயாக இருந்தது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்...! 

வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 10 பைசா அதிகரித்து ரூ.44.80 க்கு விற்கப்படுகிறது.