தங்கத்தின் விலை இன்று கணிசமாகக் குறைந்துள்ளது
ஏறுமுகத்திலேயே இருந்து வந்த தங்கத்தின் விலை, வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதத்தில் இன்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு, கொரோனா கால பொருளாதார நிலையின்மை காரணமாக அதிகரித்தது. முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக பார்ப்பதால் தேவையும் அதன் மூலம் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது. ஆறுதலளிக்கும் விதமாக இன்று தங்கம் விலை சற்று குறைந்து விற்பனையாகிறது.

22 காரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை நேற்றைய விலையான 4,538 ரூபாயில் இருந்து 19 ரூபாய் குறைந்து 4,519 ரூபாயாக இன்று விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் (22 காரட்) 152 ரூபாய் குறைந்து 35,152 ரூபாயாக விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் நேற்று 4,950 ரூபாயாக விற்பனையானது. இன்று 20 ரூபாய் குறைந்து 4,930 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவே ஒரு சவரன் 160 ரூபாய் குறைந்து 39,440 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி நேற்றைய விலையான 65 ரூபாய் 30 காசுகளில் இருந்து 70 பைசா குறைந்து 64 ரூபாய் 60 காசாக விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 700 ரூபாய் குறைந்து 64 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
