ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.107, சவரணுக்கு ரூ.856 அதிகரித்துள்ளது
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.107, சவரணுக்கு ரூ.856 அதிகரித்துள்ளது

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,678க்கும், சவரண் ரூ.37,424க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.107அதிகரித்து, ரூ4,785 ஆகவும், சவரணுக்கு ரூ.856அதிகரித்து ரூ.38,280க்கும் விற்கப்படுகிறது
எல்பிஜி சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் விலையில் பெரிதாக எந்த மாற்றமில்லால் சவரணுக்கு ரூ.120 என்பதுதான் அதிகபட்சமாக மாற்றமாக கடந்த 20 நாட்களாக நீடித்து வந்தது. தங்கம் சவரண் ரூ.38ஆயிரத்து 40 முதல் ரூ.38ஆயிரத்து 200 வரைதான் இருக்கிறது. இந்த விலைக்கு மேல் கடந்த ஒருவாரமாக விலை உயரவும் இல்லை, சரியவும் இல்லை.

அமெரிக்காவில் பணவீக்கத்தைக் குறைக்க வட்டிவீதத்தை பெடரல் வங்கி உயர்த்தும் பட்சத்தில் தங்கத்தின் விலை மேலும் சரியும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், அனைத்துக் கணிப்பையும் மீறி தங்கத்தின் விலை திடீரென இன்று சவரணுக்கு ரூ.856 அதிகரித்து, ரூ.38ஆயிரத்து 280ஆக உயர்ந்துள்ளது.
வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்றீங்களா! இந்த 5 விஷயத்தைத் தெரிஞ்சுக்கோங்க
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 10 காசு குறைந்து ரூ.65க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.65,000மாகக் குறைந்துள்ளது.
