தங்கம் விலை சவரன் மீண்டும் ரூ.43 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் பயணிக்கிறது.

தங்கம் விலை சவரன் மீண்டும் ரூ.43 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் பயணிக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாயும், சவரனுக்கு 80 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது, சவரனுக்கு ரூ.384 அதிகரித்துள்ளது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,373ஆகவும், சவரன், ரூ.42,984ஆகவும் இருந்தது.

ரெப்போ ரேட் 25 புள்ளிகள் உயர்வு: EMI, வட்டி அதிகரிக்கும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(புதன்கிழமை) கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூ.5,383ஆகவும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து ரூ.43 ஆயிரத்து 64 ஆக ஏற்றம் கண்டுள்ளது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,383க்கு விற்கப்படுகிறது.

மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப்பின் பின் அதிகரித்த தங்கம் விலை பின்னர் கடந்த வாரக்க டைசியில் குறைந்தது. ஆனால், இந்த வாரம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை மளமளவென அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.38 உயர்ந்துள்ளது.

ஏற்றத்தில் தங்கம் விலை! மீண்டும் சவரன் ரூ.43ஆயிரத்தை நெருங்குகிறது

சவரன் ரூ.44 ஆயிரத்தில் இருந்து ரூ.42 ஆயிரத்துக்குள் சரிந்த நிலையில் மீண்டும் ரூ.43 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயர்ந்துவரும் தங்கம் விலையால் நடுத்தரக் குடும்பத்து மக்கள் நிம்மதியிழந்துள்ளனர். 
வெள்ளி விலையில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் மாற்றமில்லை. வெள்ளி கிராம் ஒன்று ரூ.74.00 ஆக இருந்தநிலையில் அதே நிலை இன்றும் தொடர்கிறது. கிலோ ரூ.74,000 ஆக நீடிக்கிறது