தங்கம் விலை நாளுக்கு நாள் கணிக்க முடியாததாக மாறிவருகிறது. இந்த வாரத்தில் மட்டும் இரு நாட்கள் சரிந்த தங்கம் விலை அடுத்தடுத்து அதிகரித்தது.
தங்கம் விலை நாளுக்கு நாள் கணிக்க முடியாததாக மாறிவருகிறது. இந்த வாரத்தில் மட்டும் இரு நாட்கள் சரிந்த தங்கம் விலை அடுத்தடுத்து அதிகரித்தது.
ஆபரணத் தங்கம் விலை நேற்றும் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது.சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 16ரூபாயும், சவரணுக்கு 128 ரூபாயும் அதிகரித்துள்ளது.

58ஆயிரத்துக்கும் அதிகமான பொதுத்துறை காப்பீடு ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம்
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,680க்கும், சவரண் ரூ.37,440க்கும் விற்பனை ஆனது. இன்று காலை தங்கத்தின் விலையில் 2-வது நாளாக உயர்ந்துள்ளது.
இதன்படி, சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 16 ரூபாய் அதிகரித்து ரூ4,696ஆகவும், சவரணுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.37,568க்கும் விற்கப்படுகிறது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4696ஆக விற்கப்படுகிறது.
தங்கம் விலையை சில வாரங்களாக கணிக்க முடியாத நிலையில் இருக்கிறது. வாரத்தில் 3 நாட்கள் உயர்ந்தும், திடீரெனக் குறைந்தும்விடுகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.2500 குறைந்துள்ளது.

மோசமான உலகச்சூழலிலும் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகவே உள்ளது: சக்திகாந்த தாஸ் பெருமிதம்
இந்த வாரத்தில் இரு நாட்கள் குறைந்த தங்கம் விலை, நேற்றும், இன்றும் விலை அதிகரித்துள்ளது. இரு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.500க்கு மேல் உயர்ந்துள்ளது.
அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக்கொள்கை அறிவிப்பு அடுத்த வாரத்தில்நடக்க இருக்கிறது. இந்த அறிவிப்பை எதிர்பார்த்துதான் சர்வதேச சந்தை, உலக நாடுகள் காத்திருக்கின்றன. அமெரிக்க பெடரல் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் வட்டியை 100 புள்ளிகள் வரை உயர்த்தலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு உயர்த்தும்பட்சத்தில் ஆசிய, ஐரோப்பியச் சந்தையில் பெரிய தாக்கம் ஏற்படும்.
இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டுவார்கள், டாலர் பக்கம் கவனம் திரும்பு. ஆதலால், அடுத்தவாரம் தங்கத்தின் விலையில் பெரிய ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் எனத் தெரிகிறது.

பறக்கப்போகுது ஆகாசா ஏர்(akasa air) ! ஆகஸ்ட் 7 முதல் சேவைத் தொடக்கம்: கட்டணம் எவ்வளவு?
வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 40 பைசா குறைந்து, ரூ.61.20 ஆகவும், கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.61,200க்கும் விற்கப்படுகிறது.
