gold rate: தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு: காரணம் என்ன?: சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று தொடர்ந்து 5-வது நாளாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.7, சவரணுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று தொடர்ந்து 5-வதுநாளாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.7, சவரணுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,798க்கும், சவரண் ரூ.38,384க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.7அதிகரித்து, ரூ4,805 ஆகவும், சவரணுக்கு ரூ.56அதிகரித்து ரூ.38,440க்கும் விற்கப்படுகிறது
தங்கத்தின் விலை தொடர்ந்து 5-வது நாளாக உயர்ந்துள்ளது. கடந்த 1ம் தேதியிலிருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த 1ம் தேதிமுதல் தங்கத்தின் விலை கிராமுக்கு, 127 ரூபாய் அதிகரித்துள்ளது, சவரணுக்கு, ரூ1016 அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் பணவீக்கத்தைக் குறைக்க வட்டிவீதத்தை பெடரல் வங்கி உயர்த்தும் பட்சத்தில் தங்கத்தின் விலை மேலும் சரியும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், அனைத்துக் கணிப்பையும் மீறி தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.
தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன?
தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடு அதிகரிப்பால், தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களாகஅதிகரித்து வருகிறது. கடந்த 1ம்தேதி மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாகஉயர்த்தியது. இது தவிர செஸ் வரி 2.5 சதவீதம் சேர்த்து 15 சதவீதமாக அதிகரித்தது.
நாட்டின் தங்கம் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருவதால், அரசின் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை அதிகரித்துவருகிறது.இதையடுத்து, தங்கம் இறக்குமதிக்கான வரியை உயர்த்தியுள்ளது.
கடந்த மே மாதத்தில் தங்கம்107 டன் இற்ககுமதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திலும் ஏறக்குறைய இதே அளவுஇறக்குமதியாகியிருக்கும். உலகின் 2-வது பெரிய தங்கம் இறக்குமதியாளரான இந்தியா,நடப்புக் கணக்குப்பற்றாக்குறை, பொருளாதாரப் பிரச்சினைகள், ரூபாய் மதிப்பு சரிவால் திண்டாடுகிறது.
நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை உச்சகட்டமாக 2429 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்தியா கடந்த மே மாதத்தில் 6.03 பில்லியன் டாலருக்கு தங்கம் இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 9 மடங்குஅதிகமாகும். அந்நிய முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்து வெளியேறிவருவதால், டாலர்கள் தேவை அதிகரிக்கிறது.
இதனால், டாலர் கையிருப்பு அரசிடம் குறைகிறது. தங்கம் இறக்குமதிக்கும் முதலீட்டாளர்கள் அதிகமான டாலர்களை கோருவதால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது, நடப்புக்கணக்குப்பற்றாக்குறை கட்டுப்பாட்டை மீறும் நிலை ஏற்பட்டது. அரசின் அந்நியச் செலவாணியும் குறையத் தொடங்குகிறது. இந்த நெருக்கடியைச்சமாளிக்கவே, தங்கம் இறக்குமதி வரியை அரசு உயர்த்தியுள்ளது.
வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 70 காசு அதிகரித்து ரூ.64.70க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.64,700க்கு விற்கப்படுகிறது
- 22 carat gold rate in chennai today
- 22 carat gold rate today
- 22k gold price today
- 22k gold rate
- Chennai gold rate
- Gold rate today
- gold price
- gold price today
- gold rate
- gold rate in Chennai
- gold rate today
- gold rate today in Chennai
- gold today Chennai
- silver price
- silver price today
- silver rate
- silver rate today
- today gold price rate
- today gold rate in Chennai
- today gold rate in tamilnadu
- todays gold rate in chennai