தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் விலை அதிகரித்துள்ளது. சவரன்41,500 ரூபாயைக் கடந்துள்ளது நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் விலை அதிகரித்துள்ளது. சவரன்41,500 ரூபாயைக் கடந்துள்ளது நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை இன்று கிராமுக்கு 41 ரூபாயும், சவரனுக்கு 328 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது. 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்ழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,150ஆகவும், சவரன், ரூ.41,200ஆகவும் இருந்தது.

எகிறியது தங்கம் விலை ! மிடில் கிளாஸ் மக்களுக்கு அதிர்ச்சி! இன்றைய(2/01/2023) நிலவரம்

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்க்கிழமை) கிராமுக்கு 41 ரூபாய் அதிகரித்து ரூ.5,191ஆகவும், சவரனுக்கு 328ரூபாய் உயர்ந்து ரூ.41 ஆயிரத்து 528ஆக ஏற்றம் கண்டுள்ளது.

கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,191க்கு விற்கப்படுகிறது.

பண்டிகைக்காலம் வருவதாலும், சர்வதேச அளவில் தங்கத்தின் மீது முதலீடு மோகம் அதிகரித்து வருவதாலும், விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

உச்சம் தொட்ட தங்கம் ! சவரன் ரூ.41 ஆயிரத்தைக் கடந்தது! இன்றைய(31/12/2022) விலை என்ன?

அதுமட்டுமல்லாமல் தங்கம் விலை சவரன் ரூ.41 ஆயிரத்தைக் கடந்த நிலையில் தற்போது, ரூ.41 ஆயிரத்து 500யைக் கடந்துள்ளது. இந்த விண்ணை முட்டும் விலை உயர்வு, தங்கத்தை சிறுகச் சிறுகச் சேர்க்கும் எண்ணத்தில் இருக்கும் மிடில்கிளாக் மக்களுக்கும், நகை வாங்க நினைப்போருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது, இந்த விலை உயர்வு அடுத்துவரும் பண்டிகைக் காலம் வரை தொடரலாம் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். 

இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்.! தாறுமாறாக எகிறிய தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

வெள்ளி விலையில் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ஒரு ரூபாய் உயர்ந்து, ரூ.75.50ஆக ஏற்றம் கண்டுள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, ரூ.75,500 ஆக அதிகரித்துள்ளது