gold rate today: ஒரேநாளில் தங்கம் விலை இவ்வளவு குறைவா! காரணம் என்ன? மிஸ் பண்ணாதிங்க! இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை நேற்று உயர்ந்திருந்த நிலையில் இன்று எதிர்பாராத விதமாக திடீரென மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது.
தங்கம் விலை நேற்று உயர்ந்திருந்த நிலையில் இன்று எதிர்பாராத விதமாக திடீரென மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 30ரூபாயும், சவரணுக்கு 240 ரூபாயும் குறைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி கிராம் ரூ.4,688க்கும், சவரண் ரூ.37,504க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.30 விலை சரிந்து, ரூ4,658 ஆகவும், சவரணுக்கு ரூ.240 வீழ்ச்சி அடைந்து ரூ.37,264க்கும் விற்கப்படுகிறது.
ரயில்களில் விற்கப்படும் டீ, காபி, உணவுக்கு சர்வீஸ் சார்ஜ் நீக்கம்: ஆனால்?
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4658ஆக விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் இருந்த ஊசலாட்டத்துடனே இருந்து வருகிறது. கடந்த 3 வாரத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,500 வரை குறைந்துள்ளது.
கடந்த 11ம் தேதி முதல் சனிக்கிழமை வரை தங்கம் கிராமுக்கு 53 ரூபாயும், சவரணுக்கு 424 ரூபாயும் குறைந்து, ஏறக்குறைய ரூ.36ஆயிரத்தை எட்டிவிட்டது.
இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது. தங்கத்தின் விலை குறைந்து வரும் இந்நேரத்தில்தான் நடுத்தரக் குடும்பத்தினர், சாமானியர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஏற்ற தருணம் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்
ரூபாய் மதிப்பு இதுவரையில்லாத வரலாற்று சரிவு: டாலருக்கு எதிராக ரூ80க்கும் கீழ் வீழ்ந்தது
விலை குறைவுக்கான காரணிகள் என்ன
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு தங்கம் விலை குறைவுக்கு காரணமாகக்கூறப்படுகிறது. சர்வதேச தேவைக்கு ஏற்றார்போல் உற்பத்தியை அதிகப்படுத்த முடியாது என சவுதி அரேபியா தெரிவித்துவிட்டது. இதையடுத்து, கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் உயர்ந்தது. இதனால் டாலரின் தேவை அதிகப்படுவதையடுத்து, தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பை பெரிதாக முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பெடரல் வங்கி வரும் 26, 27ம் தேதிகளில் நடக்கும் கூட்டத்தில் வட்டி வீதத்தை உயர்த்தும் எனத் தெரிகிறது.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தினால், தங்கத்தின் விலையில் மேலும் சரிவு இருக்கும். வட்டி எந்த அளவு உயர்கிறது என்பதைப் பொறுத்து உலக நாடுகளின் கரன்ஸி மதிப்பும், தங்கத்தின் விலையில் நிலைத்தன்மையயும் முடிவு செய்யும்.
ரூபாய் மதிப்பு சரிவு பொருளாதாரத்துக்கு நல்லதுதான்: நிர்மலா சீதாராமன்
ஒருவேளை வட்டி உயர்த்தப்பட்டால், டாலர் மதிப்பு மேலும் வலுப்பெறும், பல்வேறு நாட்டு கரன்ஸிகளின் மதிப்பும் நெருக்கடிக்குள்ளாகும். இதனால், சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை, முதலீடு குறைந்து விலையும் வரும் நாட்களில் மேலும் குறையலாம் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
இது தவிர ஐரோப்பிய யூனியன் வங்கியும் இந்த வாரம் கூடி வட்டி வீதத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறது. சீனாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறுமாநிலங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருகிறது.இதனால், சீனாவின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வருவதில் தாமதம் நிலவுகிறது.இவை அனைத்தும் தங்கத்தின் விலையில் இந்த வாரம் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் குறைந்து, ரூ.60.70க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.1000 குறைந்து ரூ.60,700க்கு விற்கப்படுகிறது.
- 22 carat gold rate in chennai today
- 22 carat gold rate today
- 22k gold price today
- 22k gold rate
- 24 carat gold rate today
- Chennai gold rate
- gold price
- gold price live
- gold price today
- gold rate
- gold rate in Chennai
- gold rate today
- gold rate today in Chennai
- gold today Chennai
- silver price
- silver price today
- silver rate
- silver rate today
- today gold price rate
- today gold rate 8 gram
- today gold rate in Chennai
- today gold rate in tamilnadu