Asianet News TamilAsianet News Tamil

Gold Rate Today: தொடர் சரிவில் தங்கம்! சவரனுக்கு ரூ.110 குறைந்தது!இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை வாரத்தின் முதல்நாளான இன்று மீண்டும் குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.110வரை சரிந்துள்ளது

Gold price has  dropped for two days in a row: check rate in chennai, kovai, vellore and trichy
Author
First Published Nov 28, 2022, 10:36 AM IST

தங்கம் விலை வாரத்தின் முதல்நாளான இன்று மீண்டும் குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.110வரை சரிந்துள்ளது

தங்கம் விலை இன்று கிராமுக்கு 4 ரூபாயும், சவரனுக்கு 32 ரூபாயும் குறைந்துள்ளது. 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,925ஆகவும், சவரன், ரூ.39,400 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை விர்ர்..! ஒரேநாளில் சவரனுக்கு ரூ.280 உயர்வு: காரணம், நிலவரம் என்ன?

Gold price has  dropped for two days in a row: check rate in chennai, kovai, vellore and trichy

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(திங்கள்கிழமை) கிராமுக்கு 4 ரூபாய் சரிந்து ரூ.4,921 ஆகவும், சவரனுக்கு 42 ரூபாய் குறைந்து ரூ.39 ஆயிரத்து 368ஆக வீழ்ந்துள்ளது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,921க்கு விற்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், முதலீட்டாளர்கள் கவனம் அனைத்தும் தங்கத்தின் மீது கடந்த வாரம் திரும்பியது. இதனால் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. 
அமெரிக்க பெடரல் வங்கி நிதிக்குழுக் கூட்டம் வரும்  புதன்கிழமை நடக்கிறது.

ஏற்றத்தில் தங்கம் விலை! 2 நாட்களில் 310ரூபாய் அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன?

இந்தக் கூட்டத்தில் வட்டிவீதம் பெரிதாக உயர்த்தப்படாது என்ற தகவலால் சர்வதேச அளவில் சாதகமான போக்கை கடந்தவாரம் ஏற்படுத்தியது. ஆனால், கூட்டத்தின் முடிவில்தான் எந்தத் தகவலும் உறுதியாகும். இதனால் முதலீட்டாளர்கள் கடந்த இரு நாட்களாகவே எச்சரிக்கையுடன் முதலீட்டில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதனால்தான் 2வது நாளாகதங்கம் விலை குறைந்துள்ளது.

Gold price has  dropped for two days in a row: check rate in chennai, kovai, vellore and trichy

கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்த நிலையில் இன்று 32 ரூபாய் என மொத்தம் ரூ.112 குறைந்துள்ளது.  தங்கம் விலை தொடர்ந்து குறையும்பட்சத்தில் தங்கம் வாங்குவோர் விரைவாக வாங்குவது சிறந்தது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்

ஊசலாட்டத்தில் தங்கம்! மீண்டும் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் என்ன?

வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராம் ஒன்று ரூ.67.50 ஆகவும்,  கிலோ ரூ.67,500 ஆகவும் மாறாமல் இருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios