Asianet News TamilAsianet News Tamil

Gold Rate Today: ஊசலாட்டத்தில் தங்கம்! மீண்டும் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை கடந்த 2 நாட்களாக விலை உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது. 

Gold price has been very erratic: check rate in details
Author
First Published Nov 26, 2022, 11:29 AM IST

தங்கம் விலை கடந்த 2 நாட்களாக விலை உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது.  
 தங்கம் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாயும், சவரனுக்கு 80 ரூபாயும் சரிந்துள்ளது. 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,935ஆகவும், சவரன், ரூ.39,480 ஆகவும் இருந்தது.

ஏற்றத்தில் தங்கம் விலை! 2 நாட்களில் 310ரூபாய் அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன?

Gold price has been very erratic: check rate in details

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(சனிக்கிழமை) கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து ரூ.4,925 ஆகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.39 ஆயிரத்து 400ஆக வீழ்ந்துள்ளது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,925க்கு விற்கப்படுகிறது.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை  பெரிதாக உயர்த்தாது என்ற தகவலால் சர்வதேச அளவில் சாதகமான போக்கை ஏற்படுத்தியது. இதனால் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் கவனத்தை திருப்பியதால், கடந்த இரு நாட்கள தங்கம் விலை அதிகரித்திருந்தது. 

தங்கம் விலை விர்ர்..! ஒரேநாளில் சவரனுக்கு ரூ.280 உயர்வு: காரணம், நிலவரம் என்ன?

Gold price has been very erratic: check rate in details

ஆனால், திடீரென இன்று விலை குறைந்துள்ளது. கடந்த இரு நாட்களில் சவரனுக்கு ரூ.310 அதிகரித்த நிலையில் இன்று விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.  தங்கம் விலை கடும் ஏற்ற, இறக்கத்துடன் இருப்பதால், தங்கம் வாங்குவோர் மத்தியில் குழப்பமான சூழல் நிலவுகிறது. 

இந்த வாரத் தொடக்கத்தில் கிராம் ரூ.4920 ஆக இருந்த நிலையில் இன்று வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று 5 ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.40 அளவில் மட்டுமே மாறுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை வீழ்ச்சி! மிஸ் பண்ணாதிங்க, வாங்கிருங்க! இன்றைய நிலவரம் என்ன?

Gold price has been very erratic: check rate in details

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று நேற்று ரூ.68.00 ஆக இருந்தநிலையில்,  இன்று காலை கிராமுக்கு 50 காசு சரிந்து, ரூ.67.50 ஆக குறைந்துள்ளது. கிலோ ரூ.68,000 ஆக இருந்தநிலையில், 500 ரூபாய் சரிந்து, ரூ.67,500 ஆக குறைந்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios