Asianet News TamilAsianet News Tamil

நகை சீட்டா? ஃபிக்ஸட் டெபாசிட்டா? எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்?

நகை கடைகளில் மாதாந்திர நகை சீட்டு போடுவது லாபம் தருமா அல்லது நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்குமா என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

Gold chits vs fixed deposit.. which is better investment option Rya
Author
First Published Mar 13, 2024, 1:15 PM IST

முதலீடு, சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், நகை கடைகளில் மாதாந்திர நகை சீட்டு போடுவது லாபம் தருமா அல்லது நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்குமா என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

நிலையான வைப்பு தொகை :

நிலையான வைப்பு தொகை அதாவது ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து அதிலிருந்து மிதமான வட்டி வருமானம் பெறுவது ஆகும். வங்கிகள், நிதி நிறுவனங்கள் பல்வேறு காலங்கள் அல்லது வட்டி விகிதங்களை வழங்குகின்றன. குறைந்த ஆபத்து மற்றும் பாதுகாப்பான முதலீடுகளில் ஃபிக்ஸட் டெபாசிட் தொகையும் ஒன்று. இந்த திட்டம் முதிர்ச்சி அடைந்த உடன் உத்தரவாத தொகையும் கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீட்டின் கால அளவை பொறுத்து லாபம் கிடைக்கும். நிலையான வைப்பு தொகையில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் 5% முத்ல 7% வரை வட்டி கிடைக்கும்.

வரி விலக்கு :

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலையான வைப்பு தொகை திட்டங்களை எடுக்கும் போது, வருமான வரி சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ரூ.1,50,000 வரை வரிவிலக்கு கிடைக்கும். இதில் கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும். தனிநபர்கள் பிற மூலங்கள் என்ற பிரிவின் கீழ் வரி செலுத்த வேண்டும்.

நகைச்சீட்டு :

நகை சீட்டுகளில் பெரும்பாலும் தயாரிப்பு கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படுவதால் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும். அதாவது நகை சீட்டு போடும் போது, அதில் வாங்கும் நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் மற்றும் பிற கட்டணங்களை செலுத்த வேண்டியதில்லை.

நகை சீட்டுகளில் வாங்கும் விகிதத்தை ஆரம்பத்திலேயே நிர்ணயிக்க முடியும். உதாரணமாக நகைச்சீட்டு போடும் போது ஒரு கிராம் தங்கம் ரூ.5,500, ஆனால் முதிர்வு காலத்தில் ரூ.6000 ரூபாயாக இருந்தால் முதலீட்டாளர் ரூ.5500 என்ற ஆரம்ப விகிதத்திலேயே தங்கத்தை வாங்கலாம். இதனால் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். 
வரி சுமை : நகை சீட்டுகளுக்கு வரி விதிப்பு. இதுதொடர்பான தகவல்களை தனிநபர்கள் தெரிவிக்க வேண்டியதில்லை.

எது சிறந்தது?

முதலீடு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர், நகைச்சீட்டி, நிலையான வைப்புத்தொகை ஆகியவற்றை கவனமாக ஒப்பிட வேண்டியது முக்கியம். அபாயம், வருமான, ஆகியவற்றை மதிப்பீடு செய்து முதலீடு செய்வது நல்லது. முடிந்தால் பொருளாதார நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios