தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிரடியாக உயர்ந்து வருகிறது. அதன்படி இன்று  ஒரே நாளில் சவரனுக்கு ரூ.296 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் 

22 கேரட் தங்கத்தின் விலை! 

22 கேரட் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.296 ஆக உயர்ந்து, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 3,008 ஆகவும், சவரனுக்கு 24 ஆயிரத்து 64 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

24 கேரட் தங்கத்தின் விலை! 

24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 304 ஆக உயர்ந்துள்ளது. அதாவது கிராமுக்கு ரூ.3,158 ஆகவும் சவரனுக்கு ரூ.25,264 ஆகவும் உள்ளது 

வெள்ளி விலை நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி ரூ.40.90 ஆகவும், கிலோ ரூ. 40,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பது   குறிப்பிடத்தக்கது.