Asianet News TamilAsianet News Tamil

general geronautics : adani: ட்ரோன் துறையிலும் களமிறங்கும் அதானி குழுமம்: ஜெனரல் ஏரோநாட்டிக்ஸை வாங்குகிறது

general geronautics : adani  : ட்ரோன் விமானங்கள் வடிவமைப்பிலும் தொழிலதிபர் கவுதம் அதானியின் அதானி குழுமம் கால் பதிக்கிறது. பெங்களூரைச் சேர்ந்த ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை அதானி டிபென்ஸ் அன்ட் ஏரோஸ்போஸ் நிறுவனம் விலைக்கு வாங்குகிறது

general geronautics : adani : Adani Defence To Take 50% Stake In Agricultural Drone Startup
Author
Bangalore, First Published May 28, 2022, 1:19 PM IST

ட்ரோன் விமானங்கள் வடிவமைப்பிலும் தொழிலதிபர் கவுதம் அதானியின் அதானி குழுமம் கால் பதிக்கிறது. பெங்களூரைச் சேர்ந்த ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை அதானி டிபென்ஸ் அன்ட் ஏரோஸ்போஸ் நிறுவனம் விலைக்கு வாங்குகிறது

general geronautics : adani : Adani Defence To Take 50% Stake In Agricultural Drone Startup

இந்த நிறுவனத்திலிருந்து 50 சதவீதப் பங்குகளை வாங்க அதானி குழுமம் ஒப்பந்தம் செய்துவிட்டது. ஆனால், எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கு இடையே கையொப்பமானது என்பது தெரியவில்லை.

பெங்களூரைச் சேர்ந்த ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வேளாண் துறைக்கான  ட்ரோன்களை, ரோபாட்களை தயாரிக்கும் சிறப்புபெற்ற நிறுவனமாகும். குறிப்பாக பயிர்காப்பு உபகரணங்கள், பயிர்கள் வளத்தை கண்காணித்தல், விளைச்சலைக் கண்காணிக்கும் கருவிகள், புள்ளிவிவர ஆய்வு, செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் சிறந்து விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை அதானி குழுமம் கையகப்படுத்த உள்ளது.

general geronautics : adani : Adani Defence To Take 50% Stake In Agricultural Drone Startup

அதானி டிபென்ஸ் அன்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஸ் ராஜ்வான்ஷி கூறுகையில் “ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் அதானி டிபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் இடையிலான கூட்டுறவு, ராணுவம் மற்றும் சிவில் முக்கியத்துவத்தை ஒருங்கிணைக்கிறது. அதானி குழுமத்தின் ராணுவ யுஏவி திறன் மற்றும் ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் திறன் இணைந்து தொலைக்கில் புதிய தளத்தை அமைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 2026ம் ஆண்டில் ட்ரோன்களுக்கான சந்தை மிகவேகமாக வளர்ச்சி அடைந்து ரூ.30ஆயிரம் கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து ட்ரோன்களை இறக்குமதி செய்யத் தடை விதித்தது. இந்தத் தடைக்குப்பின், இந்தியாவில் ட்ரோன் தயாரிப்புக்கு அதிகமான முக்கியத்துவம் கிடைக்கிறது.

general geronautics : adani : Adani Defence To Take 50% Stake In Agricultural Drone Startup

ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் புர்மான் கூறுகையில் “ எங்களுடன் அதானி குழுமம் இணைந்து கூட்டுறவு வைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது அடுத்தக் கட்டத்துக்கு எங்கள் நிறுவனத்தை நகர்த்தும். இந்தியாவை ட்ரோன்களுக்கான ஒரு தளமாக மாற்ற எங்களின் உழைப்பை அதானி குழுமத்துடன் இணைந்து வழங்குவோம்” எனத் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios