Asianet News TamilAsianet News Tamil

gdp of india: 2022ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் குறையும்: ஐ.நா.கணிப்பு

gdp of india: இந்தியாவின் பொருளதார வளர்ச்சி 2022ம் ஆண்டில் 2 சதவீதம் குறைந்து, 4.6% மாக இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது.

gdp of india: Indias 2022 GDP growth downgraded : UN report
Author
New Delhi, First Published Mar 25, 2022, 11:42 AM IST

இந்தியாவின் பொருளதார வளர்ச்சி 2022ம் ஆண்டில் 2 சதவீதம் குறைந்து, 4.6% மாக இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையே நடந்துவரும் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, வர்த்தகம் செய்வதில் சிக்கல், இறக்குமதி சிக்கல்கள், பணவீக்கம், ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்துதல், நிதி நிலைத்தன்மையை நிலைப்படுத்த வேண்டிய நெருக்கடிஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சி குறையும்.

ஐ.நா.அமைப்பின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

gdp of india: Indias 2022 GDP growth downgraded : UN report

ரஷ்யா உக்ரைன் போர்

ரஷ்யா, உக்ரைன் இடையே நடந்து வரும் போர் காரணமாக உலகளவில் பொருளாதார வளர்ச்சி 3.6 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதமாகக் குறையும். மிகைப்பொருளாதாரக் கொள்கை  காரணமாக, வளரும் நாடுகளின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகும்.

வீழ்ச்சி

2022ம் ஆண்டில் ரஷ்யப் பொருளதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும். வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவு சரிவு ஏற்படும். இதேபோன்று ஐரோப்பாவின் மேற்குப்பகுதி, மத்திய, தெற்கு, தென்கிழக்கு ஆசியா பகுதிகளிலும் பொருளாதார வளர்ச்சியில் வேகம் குறையும்.

gdp of india: Indias 2022 GDP growth downgraded : UN report

இந்தியா ஜிடிபி

குறிப்பாக இந்தியாவின் பொருளாதாரம் 2022ம் ஆண்டில் 6.7சதவீதம் வளர்ச்சி பெறும் என்று என முன்பு கணித்திருந்தோம். ஆனால், சர்வதேச காரணிகளால் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் குறைந்து 4.6சதவீதமாகக் குறையும்.  ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, தேவை காரணமாக தெற்காசியா, மேற்கு ஆசியா நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கும். 

சிக்கல்கள்

இந்தியா குறிப்பாக பல்வேறு சிக்கல்களை இந்த ஆண்டில் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வு, உணவுப் பணவீக்கம், விலைவாசி உயர்வு, நிதி நிலையற்றதன்மை, ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கையை இறுக்குவது போன்றவற்றால் சிக்கல்கள் ஏற்படலாம்.
உக்ரைன் ரஷ்யா போரின் விளைவால், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்திலிருந்து 2.4% குறையும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதத்திலிருந்து 4.8சதவீதமாக வீழ்ச்சி அடையும். ரஷ்யாவின் பொருளாதாரம் 2.3சதவீதத்திலிருந்து மைனஸ் 7.3 சதவீதமாக வீழ்ச்சி அடையும்.

gdp of india: Indias 2022 GDP growth downgraded : UN report

ரஷ்யாவின் நிலை

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையால் ரஷ்யப் பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடிநிலையை எதிர்கொள்ளும். எரிபொருள்ஏற்றுமதியை அதிகப்படுத்த ரஷ்யா விரும்பினாலும் பல நாடுகள் டாலரில் வர்த்தகம் செய்யத் தயங்குகின்றன. இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தட்டுப்பட்டால் விலை உயர்வை எதிர்காலத்தில் ரஷ்யா சந்திக்க வேண்டியதிருக்கும், ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு மோசமாகச் சரியும். வேலைவாய்ப்பின்மையைக் கட்டுப்படுத்த ரஷ்ய அரசு முயற்சிக்கும்.

gdp of india: Indias 2022 GDP growth downgraded : UN report

வளரும் நாடுகள்

உணவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு வளரும் பொருளாதாரத்தை கொண்டிருக்கும் நாடுகளுக்கு உடனடிபாதிப்பை ஏற்படுத்தும். உணவுப் பொருட்களின் விலை உயர்வால் வீடுகளில் பட்டினியையும், வாழ்வாதாரத்தை மோசமாக்கும் சூழலையும் ஏற்படுத்தும். 
இவ்வாறு ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios