நாட்டின் 2-வது மிகப்பெரிய சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தை ஸ்விட்சர்லாந்தின் ஹோல்சிம் லிமிடட் நிறுவனத்திடம் இருந்து கவுதம் அதானியின் அதானி குழுமம் விலைக்கு வாங்கிதயது.

நாட்டின் 2-வது மிகப்பெரிய சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தை ஸ்விட்சர்லாந்தின் ஹோல்சிம் லிமிடட் நிறுவனத்திடம் இருந்து கவுதம் அதானியின் அதானி குழுமம் விலைக்கு வாங்கிதயது.

ஹோல்சிம் லிமிடட் நிறுவனத்திடம் இருந்த அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஏசிசி லிமிடட் பங்குகளை ரூ.81,311 கோடிக்கு(10.50பில்லியன் டாலர்) அதானி குழுமம் விலைக்கு வாங்கியது. அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.14 லட்சம் கோடியாகும்.இதில் அம்புஜா சிமெண்ட்ஸ் மட்டும் ரூ.73,349 கோடியாகும்.

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஹோல்சிம் நிறுவனம் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்து அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தைத் தொடங்கியது. கடந்த 2015ம் ஆண்டு ஹோல்சிம் நிறுவனம் பிரான்ஸைச் சேர்ந்த லாபார்ஜ் நிறுவனத்துடன் இணைந்து லாபார்ஜ்ஹோல்சிம் என்று மாறியது .

அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 960 கோடி டாலராகும். இதில் ஹோல்சிம் நிறுவனம் 63.1 சதவீத பங்குகளை ஹோல்டரின்ட் முதலீடு நிறுவனம் மூலம் வைத்துள்ளது. ஏசிசி நிறுவனத்தில் ஹோல்டரின்ட் முதலீட்டு நிறுவனம் 4.48 சதவீதப் பங்குகளை வைத்துள்ளது.

 சமீபகாலங்களாக ஹோல்சிம் நிறுவனம் தனது சொத்துக்களை விற்று கடன்களைச் செலுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹோல்சிம் நிறுவனம் தனது பிரசேில் யுனிட்டை 100 பில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்தது. 
ஹோல்சிம் நிறுவனம் தனது நிறுவனங்களை விற்பது தொடர்பாக ஜேஎஸ்டபிள்யு மற்றும் அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களிடம்பேசி தனது விருப்பங்களைத் தெரிவித்திருந்தது.

இதன் வெளிநாட்டில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, ஹோல்சிம் நிறுவனத்தின் சிஇஓ ஜான் ஜெனிச் இருவருக்கும் இடையே ஒப்பந்தங்கள் முடிவாகியுள்ளன. 

இதன்படி, ஹோல்சிம் நிறுவனத்திடம் இருக்கும் அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் துணை நிறுவனமான ஏசிசி ஆகியவற்றின் பங்குகளை ரூ.81,311 கோடிக்கு அதானி குழுமம் வாங்க ஒப்பந்தம் முடிவாகியுள்ளது. அதானி குழுமம் கையகப்படுத்தியதில் மிகப்பெரிய டீல் இதுவாகும்.

இதன் மூலம் இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக அதானி மாறிவிட்டார். ஆண்டுக்கு 70மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்ய முடியும். ஹோல்சிம் நிறுவனம் அம்புஜா சிமெண்ட்ஸில் 63.19 சதவீதப் பங்குகளையும், ஏசிசியில் 54.53 சதவீதப் பங்குகளையும் வைத்துள்ளது.

அம்புஜா சிமெண்ட்ஸை விலைக்கு வாங்க சாஜன் ஜிண்டால் தலைமையிலான ஜேஎஸ்டபிள்யு குழுமம், ஆதித்யா பிர்லா குழுமம் ஆகியவை போட்டியிட்டன. இறுதியில் கவுதம் அதானியின் அதானி குழுமம் விலைக்கு வாங்கியுள்ளது.