Asianet News TamilAsianet News Tamil

ரூ.86 உயர்ந்தது சிலிண்டர் விலை - "சமையல் பண்ணவா? வேண்டாமா?..." குமுறும் பெண்கள்

In the international market price of crude oil petrol diesel and LPG prices to be tweaked from time to time
gas cylinder-price-hike
Author
First Published Mar 1, 2017, 1:09 PM IST


மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டரின் விலை 86 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பெண்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலை அவ்வப்போது மாற்றி அமைக்கப்படும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை உயர்த்தப்பட்டு வருகிறது,

அதே போன்று எரிவாயு சிலிண்டர்களின் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் மானியம் இல்லாத சிலிண்டருக்கு 5 ரூபாயை பெட்ரோலியத் துறை உயர்த்தியது.

gas cylinder-price-hike

தற்போது மானியம் இல்லாத சிலிண்டரின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது சிலிண்டர் ஒன்றுக்கு 86 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு சிலிண்டரின் விலை737 ரூபாய் என்று இருந்த நிலையில் தற்போது 86 ரூபாய் உயர்த்தப்பட்டு 823 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று பெட்ரோலியத் துறை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

gas cylinder-price-hike

இந்த விலை உயர்வு உடனடியாக அமல்படுத்தப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மானியத்துடன் வழங்கப்படும் சிலிண்டரின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுள்ளது.

இந்த சிலிண்டர் விலை உயர்வு பொது மக்கள் மற்றும் பெண்களிடையே கடும் கோபத்தை  ஏற்படுத்தியுள்ளது,

Follow Us:
Download App:
  • android
  • ios