புதிய பைக்கில் செம கெத்தா போஸ் கொடுக்கும் கங்குலி…. அதி நவீன பிஎம் டபிள்யூ மோட்டார் சைக்கிள் !!

https://static.asianetnews.com/images/authors/7c75b3b3-3057-52ee-ad74-0f9554f16f46.jpg
First Published 10, Feb 2019, 7:32 AM IST
ganguly gota bmw motor cycle
Highlights

பைக்குகளின்  காதலரான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  கங்குலி தான் வாங்கிய 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அதி நவீன பிஎம் டபிள்யூ மோட்டார் கைக்கிளில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் டோனி மோட்டார் சைக்கிள்கள் மீது அதிக பிரியம் கொண்டவர்.அவரிடம் சுமார் 20 அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் இருக்கின்றன. கிரிக்கெட் போட்டி இல்லாத நாட்களில் மோட்டார் சைக்கிளில் உலாவருவது அவருக்கு பிடித்த பொழுது போக்காக உள்ளது. அதுவும் சென்னை வீதிகளில் அவ்வப்போது டோனி பைக் சவாரி செய்வார்.

டோனி போலவே மேலும் சில கிரிக்கெட் வீரர்களும் மோட்டார்சைக்கிள்கள் மீது ஆர்வத்துடன் உள்ளனர். கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு பி.எம்.டபிள்யூ ரக மோட்டார்சைக்கிளை வாங்கினார்.

அந்த மோட்டார்சைக்கிளின் விலை சுமார் ரூ.3 லட்சம் ஆகும். 3 ஆண்டுகள் வாரண்டி கொண்ட அந்த மோட்டார்சைக்கிள் அதி நவீன வசதிகள் கொண்டவையாகும்.

தற்போது முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலியும் இதே ரக புதிய மோட்டார்சைக்கிள் வாங்கி உள்ளார். இந்த மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ.3 லட்சத்து 49 ஆயிரம் ஆகும்.

313 சி.சி. சக்தி கொண்ட இந்த மோட்டார் சைக்கிள் அதிநவீன வசதிகள் கொண்டது. பி.எம்.டபிள்யூ மோட்டார் சைக்கிள்கள் ஜெர்மனி, தாய்லாந்து, பிரேசில் நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

loader