வெளிநாடு செல்லும் பயணிகள் ரோமிங்கில் இலவச அழைப்புகளை பெறுவதற்கான பேக்குகளை பாரதி ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது.
அதாவது, குறுகிய கால பயணத்திற்கு, சுமார் 10 டாலரில் இருந்து தொடங்கி, சுமார் ஒரு மாதம் வரை தங்க திட்டமிடுபவர்களுக்கு , 30 நாள் பேக் 75 டாலருக்கு வழங்குகிறது பாரதி ஏர்டெல்
அதுமட்டுமில்லாமல், விடுமுறை பயண சீசன் நெருங்கிவரும் நிலையில் 10 நாள் வேலிடிட்டியுடன் 45 டாலருக்கான நடுத்தர கால அளவு பேக்கையும் அறிமுகம் செய்துள்ளது.
அதாவது, அமெரிக்கா அல்லது கனடா செல்பவர்கள் இந்திய மதிப்பில் 30 நாள் பேக் 4,999க்கு இலவச இன்கமிங், 3ஜிபி டேட்டா, இந்தியாவுக்கான இலவச அழைப்பு நிமிடங்கள் 400 பெறலாம் என தெரிவித்துள்ளது.
அதே சமயத்தில், 649 க்கு ஒரு நாள் பேக்காக இலவச இன்கமிங், 300 எம்பி டேட்டா, இந்தியாவுக்கான 100 இலவச நிமிடங்கள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோவின் வித்தியாசமான சலுகையை தொடர்ந்து, பாரதி ஏர்டெல் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளது..
