Asianet News TamilAsianet News Tamil

forbes billionaireslist: இந்தியாவில் கோடீஸ்வரர்கள் 166 ஆக அதிகரிப்பு: டாப்-2 முகேஷ் அம்பானி, அதானி: போர்ப்ஸ்

forbes  billionaires list : சர்வதேச காரணிகள், கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க பெட் வங்கியின் அறிவிப்பு ஆகியவற்றால், மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் பெருத்த சரிவுடன் தொடங்கியது.

forbes  billionaires list : Forbes India billionaires 2022: Mukesh Ambani tops list, Gautam Adani second
Author
New Delhi, First Published Apr 6, 2022, 10:34 AM IST

2022ம் ஆண்டுக்கான உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உலகளவில் 10-வது இடத்தையும், இந்திய அளவில் முதலிடத்தையும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி பிடித்துள்ளார் என்று போர்ப்ஸ் ஏடு தெரிவித்துள்ளது.

7% அதிகரிப்பு

இந்திய அளவில் 2-வது கோடீஸ்வரராக கவுதம் அதானி இடம் பெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே முகேஷ் அம்பானி, கவுதம் அதானி இருவரும்தான் முதலிரு இடங்களில் மாறி மாறி இடம் பெற்றுவருகின்றனர்.

forbes  billionaires list : Forbes India billionaires 2022: Mukesh Ambani tops list, Gautam Adani second

முகேஷ் அம்பானியின் சொத்து கடந்த நிதியாண்டில் 7 சதவீதம் அதிகரித்து, 9ஆயிரத்து 70 கோடி டாலருடன் முதலிடத்தில் உள்ளார். கவுதம் அதானி 9 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஹெச்சிஎல் நிறுவனத்தின் இயக்குநர் ஷிவ் நாடார் 2,870 கோடி டாலர் சொத்துக்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். கடந்த 2021ம் ஆண்டைப் போலவே டாப் -3 இடங்களில் எந்த விதமான மாற்றமும் இல்லை.

பூனாவல்லா 4வது இடம்

கோவிஷீல்ட் தடுப்பூசியைத் தயாரித்த சீரம் நிறுவனத்தின் இயக்குநர் ஆதார் பூனாவல்லா 2430 கோடி சொத்துக்களுடன் 4-வது இடத்தில் உள்ளார். டி-மார்ட் நிறுவனத்தின் இயக்குநர் ராதாகிருஷ்ணன் தாமணி கடந்த ஆண்டு உலகளவில் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றார். 2ஆயிரம் கோடி டாலர் சொத்துக்களுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

forbes  billionaires list : Forbes India billionaires 2022: Mukesh Ambani tops list, Gautam Adani second

லட்சுமி மிட்டல்

உலோகத்தின் ராஜா எனப்படும் அர்சலர்மிட்டல் நிறுவனத்தின் தலைவர் லட்சுமி மிட்டல் 1790 கோடி டாலர் சொத்துக்களுடன் 6-வது இடத்திலும், ஓ.பி. ஜிண்டால் குழுமத்தின் தலைவர் சாவித்ரி ஜிண்டால் 1770 கோடி சொத்துக்களுடன் 7-வது இடத்தில் உள்ளார். 

ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா 1650 கோடி டாலர் சொத்துக்களுடன்  8-வது இடத்திலும், சன் பார்மா நிறுவனத்தின் திலிப் சங்வி 1560 கோடி டாலர் சொத்துக்களுடன் 9-வது இடத்தில் உள்ளார். கோடக் மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் உதய் கோடக் 1430 கோடி டாலர்களுடன் 10-வது இடத்தில் உள்ளார்.

forbes  billionaires list : Forbes India billionaires 2022: Mukesh Ambani tops list, Gautam Adani second

166 ஆக அதிகரி்ப்பு

இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டில் 140ஆக இருந்த நிலையில்  166 ஆக அதிகரித்துள்ளது. 
இந்த உலகில் மொத்தம் 2,668 கோடீஸ்வர்கள் உள்ளனர். இதில் கடந்த ஆண்டை விட 87 பேர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து குறைந்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

உலகளவில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 40,000 கோடி டாலர் குறைந்து, 12.70 லட்சம் கோடி டாலர்களாகச் சரிந்துள்ளது. இந்த ஆண்டு கோடீஸ்வரர்கள் பட்டியலுக்கு புதிதாக 236 பேர் வந்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios