தங்கம் விலை 6-வது நாளாக இந்த வாரம் முழுவதும் குறைந்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 வீழ்ந்துள்ளது.

தங்கம் விலை 6-வது நாளாக இந்த வாரம் முழுவதும் குறைந்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 வீழ்ந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாயும், சவரனுக்கு 200 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,235ஆகவும், சவரன், ரூ.41,880ஆகவும் இருந்தது.

தங்கம் விலை மளமளச் சரிவு| சவரனுக்கு ரூ.360 குறைந்தது: நிலவரம் என்ன?

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(சனிக்கிழமை) கிராமுக்கு 25ரூபாய் சரிந்து ரூ.5,210ஆகவும், சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ரூ.41 ஆயிரத்து 680ஆக வீழ்ந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,210க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை இந்த வாரம் முழுவதும் குறைந்துள்ளது. கடந்த 6 நாட்களில் இதுவரை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது நடுத்தர மக்களுக்கும், நகைப் பிரியர்களுக்கும் ஆறுதலாகவும், கூடுதலாக தங்கம் வாங்கும் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.

அமெரிக்க பணவீக்கம், பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்த இருக்கும் திட்டமும்தான் தங்கம் விலை சரியக் காரணமாகும். அமெரிக்கப் கடன் பத்திரங்கள் மதிப்பு உயரத் தொடங்கிவிட்டதால், தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து அதில் முதலீடு அதிகரித்துள்ளது. அதுமட்டும்லாமல் முகூர்த்த காலம் பரபரப்பாக இல்லாததால் தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது.

வளர்ச்சியும் சரிவும்| டாப்-25 கோடீஸ்வரர்கள் வரிசையில்கூட அதானி இல்லை!

இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் கிராம் ரூ.5,280 ஆக இருந்தது, இன்று தங்கம் கிராம் ரூ.5,210 ஆகக் சரிந்துள்ளது. ஏறக்குறைய கிராமுக்கு 70ரூபாய் குறைந்துள்ளது. சவரனுக்கு, 560ரூபாயும் குறைந்தது மட்டுமல்லாமல் ரூ.42 ஆயிரத்துக்கு கீழ் சரிந்துள்ளது.

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.70.90 ஆக இருந்தநிலையில் கிராமுக்கு 90 பைசா குறைந்து, ரூ.70.00 ஆகவும், கிலோ ரூ.70,900 ஆக இருந்தநிலையில் கிலோவுக்கு ரூ.900 சரிந்து, ரூ.70,000 ஆகவும் வீழ்ச்ச்சி அடைந்துள்ளது.