Asianet News TamilAsianet News Tamil

itr filing: itr date: 2021-22 நிதியாண்டில் 5.83 கோடி பேர் வருமானவரி ரிட்டன் தாக்கல்

2021-22ம் நிதியாண்டில் ஜூலை 31ம் தேதிவரை மொத்தம் 5.83 கோடி பேர் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

For FY22, records show that about 58.3 million income tax forms were filed.
Author
New Delhi, First Published Aug 2, 2022, 11:09 AM IST

2021-22ம் நிதியாண்டில் ஜூலை 31ம் தேதிவரை மொத்தம் 5.83 கோடி பேர் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடந்த 2020-21ம் ஆண்டில் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்த அளவும், ஜூலை 31ம் தேதிவரை தாக்கல் செய்த ரிட்டன் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒரே அளவாக இருக்கிறது. 

வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய கடைசி நாளான ஜூலை 31ம் தேதி மட்டும் 72.40 லட்சம் பேர் ரிட்டன் தாக்கல் செய்தனர்.இது கடந்த 2019ம் ஆண்டு எண்ணிக்கையான 49 லட்சத்தைகவிட அதிகரி்த்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 5.13 கோடி பேர் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ததாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. 

For FY22, records show that about 58.3 million income tax forms were filed.

itr filing date:ஐடி ரிட்டன் தாக்கலுக்கு கடைசி தேதியை தவறவிட்டாச்சா?அடுத்து என்ன செய்வது? சட்ட நடவடிக்கை வருமா?

தொடக்கத்தில் வருமானவரி ரிட்டன் இ-பைலிங் மிகவும் மந்தமாக நடந்தது. அதாவது ஒரு கோடி ரிட்டன்கள் மிகவும் மெதுவாகத் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அதன்பின் வேகமெடுத்தது. ஜூலை 22ம் தேதிவரை 2.48 கோடி பேர் மட்டுமே ரிட்டன் தாக்கல் செய்திருந்தனர். அடுத்த 9 நாட்களில் 3 கோடிக்கும் அதிகமானோர் ரிட்டன் தாக்கல் செய்தனர்.

வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவி்த்துவிட்டது. இதனால், ஜூலை 25ம் தேதிக்குள் 3 கோடிபேர் ரிட்டன் தாக்கல் செய்தனர்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் காலதாமதமாக வருமான வரி ரிட்டனை அபராதத்துடன் டிசம்பர் 31ம் தேதிவரை தாக்கல் செய்யலாம். 

For FY22, records show that about 58.3 million income tax forms were filed.

ஆண்டுக்கு ரூ.5லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் வருமானவரிச் சட்டம் 243(எப்) பிரிவில் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டியிருந்துத. ஆனால், பட்ஜெட்டில் இந்த அபராதத்தை ரூ.5 ஆயிரமாக மத்திய நிதியஅமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்தார். 

ETF என்றால் என்ன ? மியூச்சுவல் ஃபண்ட் Vs இ.டி.எஃப்.. எது சிறந்தது ? முழு தகவல்கள்

ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு குறைவாக வருமானம் ஈட்டுவோர் தாமதமாக ரிட்டன் தாக்கல் செய்தால், அதற்கு ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். புதிய வருமானவரித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு கீழ் வருமானம் ஈட்டுவோர், எந்தவிதமான அபராதமும் செலுத்தத் தேவையில்லை. 

ஐடிஆர் கடைசித் தேதியையும தவறவிட்டால் வரி செலுத்துவோருக்கு பல பின்னடைவுகள் ஏற்படும். அதாவது வரி செலுத்துவோர் வரி அளவுக்கு ஏற்பட வட்டி செலுத்த வேண்டியதிருக்கும். இது கடந்த ஐடிஆர் தாக்கல் செய்த தேதியிலிருந்து கணக்கிட்டு ஒரு சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.

For FY22, records show that about 58.3 million income tax forms were filed.

itr filing date: ஐடி ரிட்டன் தாக்கலுக்கு 31ம்தேதி கடைசி: தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவலின்படி, இதுவரை 3.96 கோடி ரிட்டன்கள் மின்னணு மூலம் சரிபார்க்கப்பட்டன. 3.71 கோடிக்கும் அதிகமான ரிட்டன்கள் ஆதார் அடிப்படையிலான ஓடிபி மூலம் சரிபார்க்கப்பட்டன எனத் தெரிவித்துள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios