மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துறை அறிவிப்பை வெளியிடும் முன்பு ‘பூமி திருத்தி உண்’ என்ற ஔவையாரின் ஆத்திச்சூடி பாடலை எடுத்துக்கூறினார். விளை நிலத்தை உழுது, அதில் பயிர் செய்து உண் என்பதே அந்த வரிக்கான விளக்கமாகும். இதையடுத்து மத்திய அரசின் 5 அணிகலன்களான திருக்குறை மேற்கொள் காட்டி பேசினார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். 

"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்... அணியென்ப நாட்டிவ் வைத்து" என்ற குறளை மேற்கொள்காட்டி நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 அணிகலன்களை எடுத்துரைத்தார். அப்போது எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு குரல் எழுப்பினர். இருப்பினும் எதிர்க்கட்சிகளின் சலசலப்பை பொருட்படுத்தாமல் சிங்கப் பெண்ணாக கர்ஜித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடியின் சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார். 

நாட்டின் வளர்ச்சி, பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் சிறப்பாக இருப்பதாகவும், பிணியின்மைக்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளதாகவும் புகழ்ந்துரைத்தார். நோய் நீக்கம், செல்வம், விவசாயம், மகிழ்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றை 5 அணிகலன்களாக திருக்குறளை மேற்கொள் காட்டி விளக்கினார். 

நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று மோடி குறிப்பிட்டுள்ளதையும், விளைபொருள் பெருக்கத்திற்காக தான் மோடி அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நாட்டை பாதுகாப்பதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் திருக்குறளை மேற்கொள் காட்டி எடுத்துரைத்தார்.