பூமியில் இருக்கும் படிமவடிவ எரிபொருட்கள் பயன்பாட்டைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத எரிபொருட்களைப் பயன்படுத்தும் பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா கொள்கையை மத்திய மின்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
பூமியில் இருக்கும் படிமவடிவ எரிபொருட்கள் பயன்பாட்டைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத எரிபொருட்களைப் பயன்படுத்தும் பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா கொள்கையை மத்திய மின்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
கடந்த ஆண்டு சுதந்திரத்தனத்தன்று, பிரதமர் மோடி, விரைவில் தேசிய ஹைட்ரஜன் இயக்கத்தைத் தொடங்கும் என்று அறிவித்திருந்தார். அதன் முன்னெடுப்பாகவே இந்த திட்டத்துக்கான கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பசுமை ஹைட்ரஜன் என்றால் என்ன?
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உதவியோடு, நீரிலிருக்கும் ஹைட்ரஜன் அணுக்களையும் ஆக்சிஜன் அணுக்களையும் பிரிப்பதன் மூலம் பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கப்படுகிறது. புதைபடிம எரிபொருள்களின் உதவியோடுதான் வழக்கமாக ஹைட்ரஜன் தயாரிக்கப்படுகிறது. உரங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவற்றுக்கான முக்கியமான மூலப்பொருளாக ஹைட்ரஜன் இருக்கிறது.
தொழிற்சாலைகள், போக்குவரத்துத் துறைகளில் கரியமிலவாயுக் குறைப்பு இலக்கை இலக்கை அடைய வேண்டுமெனில், நமக்கு தூய எரிவாயு அவசியம். அதில், பசுமை ஹைட்ரஜன் முக்கியப் பங்குவகிக்கும்
இந்த கொள்கையை வெளியிட்டுள்ள மத்திய மின்துறை அமைச்சகம், பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா உற்பத்தியாளர்களுக்கு சலுகைகளையும் அறிவித்துள்ளது.
படிம எரிபொருட்களுக்கு மாற்றாக இருக்கும் எதிர்கால எரிபொருளாக பசுமை ஹைட்ரஜன் மற்றும் அமோனியா எதிர்காலத்தில் இருக்கும், புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பயன்படுத்தி இந்த எரிபொருட்களை உற்பத்தி செய்வது பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா என அழைக்கப்படுகிறது. பூமியிலிருந்து கிடைக்கும் படிம எரிபொருளைக் குறைத்து, பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியாவுக்கு மாற மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்தியா 50 லட்சம் டன்கள் அளவுக்கு பசுமை ஹைடர்ஜனை உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளது. பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் இலக்கை அடையும் நோக்கில், இந்தியா பசுமை ஹைட்ரஜன், அமோனியா உற்பத்தியைப் பெருக்கி, அதை உலகளவில் ஏற்றுமதி செய்யும் முனையமாக இந்தியா திகழ திட்டமிடப்பட்டுள்ளது.

பசுமை ஹைட்ரஜன் மூலம் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உருவாக்கலாம், இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான தீங்கும் இல்லாத, எரிசக்தியை நாம் பெற முடியும். தற்போது இந்த முறையிலான பசுமைஹைட்ரஜனை வர்த்தகப்பயன்பாட்டுக்கு மட்டும் குறுகிய அளவில் நடந்து வருகிறது.
பசுமை ஹைட்ரஜன், அமோனியா கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுவிட்டதால், இந்த இரு பொருட்களையும் உற்பத்தி செய்ய தனியாக உற்பத்தி மண்டனம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இடையிலான மின்பகிர்மானக்கட்டணங்களை ரத்து செய்யப்படும், பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா தயாரிப்பாளர்களுக்கு ஊக்களிப்பு உற்பத்தி அடிப்படையில் மின்சார இணைப்பு வழங்கப்படும்.
இதன் மூலம் பூமிக்கு அடியில் இருக்கும் படிவவடிவ எரிபொருட்களை மட்டும் நம்பி இருக்கும்நிலை குறையும், கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறையும். எதிர்காலத்தில் இந்தியா பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா ஏற்றுமதி செய்யும் முனையமாகத் திகழ வேண்டும்.
பசுமை ஹைட்ரஜன், அமோனியா உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி செய்ய வசதியாக துறைமுகம்அருகே அவர்களின் பங்கர்களை நிறுவ அனுமதிக்கப்படும். இதற்குத் தேவையான நிலத்தை அந்தந்த துறைமுக வாரியமே வழங்கும்.
