Trade deficit: நடப்பு நிதியாண்டின் பிப்ரவரி மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 23% அதிகரித்து, 3,381 கோடி டாலராக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், ஏற்றுமதியைவிட இறக்குமதி 35 சதவீதம் அதிகரித்து, 5,500 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதனால், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அளவு 2120 கோடி டாலராக விரவடைந்துள்ளது. 

நடப்பு நிதியாண்டின் பிப்ரவரி மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 23% அதிகரித்து, 3,381 கோடி டாலராக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், ஏற்றுமதியைவிட இறக்குமதி 35 சதவீதம் அதிகரித்து, 5,500 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதனால், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அளவு 2120 கோடி டாலராக விரவடைந்துள்ளது. 

ஒரு நாட்டின் ஏற்றுமதியைவிட இறக்குமதி குறைவாகஇருக்க வேண்டும். அப்போதுதான் வர்த்தகப்பற்றாக்குறை குறைவாக இருக்கும். ஆனால், ஏற்றுமதி குறைவாகவும், இறக்குமதி அதிகமாக இருந்தால், இந்தியா வெளிநாடுகளுக்கு தர வேண்டிய பணத்தின் அளவு அதிகரித்து வர்த்தகப் பற்றாக்குறை நிலவும், இது பொருளாதாரத்துக்கு ஆரோக்கியமான போக்கு அல்ல.

கடந்த ஜனவரி மாதம் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 1700 கோடி டாலராக இருந்தது. இதற்கு முன் 2021, நவம்பரில் 2290 கோடி டாலராக அதிகரித்திருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை வர்த்தகப் பற்றாக்குறை சராசரியாக 2,170 கோடி டாலராகவே இருந்து வருகிறது.

ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் வர்த்தகப் பற்றாக்குறை அளவு 2020, பிப்ரவரியில் இருந்ததைப்போல் அதிகரித்துவிட்டது. குறிப்பாக உரம் இறக்குமதி கடந்த மாதம் 7 மடங்கு உயர்ந்து, 1600 கோடி டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி இறக்குமதி இருமடங்காக 2800 கோடிக்குஇறக்குமதியாகியுள்ளது

தங்கம் இறக்குமதி 4680 கோடி டாலருக்குதான் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுகடந்த 2021, பிப்ரவரியோடு ஒப்பிடுகையில் 11.5% குறைவுதான். இருப்பினும், 2022, ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் இருமடங்குஉயர்ந்துள்ளது. ஜனவரியில் 2400 கோடி டாலருக்குதான் தங்கம் இறக்குமதியாகியிருந்தது. 

பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி பிப்ரவரியில் 22.2% அதிகரி்த்து, 2970 கோடி டாலராக அதிகரித்துள்ளது. பெட்ரோல் அல்லாத பொருட்களின் இறக்குமதியும் வேகமாக அதிகரித்துள்ளது. 2020, பிப்ரவரி மாதத்தைவிட, 47.3%உயர்ந்து, 3170 கோடி டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ஐசிஆர்ஏ ரேட்டிங் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதாரவல்லுநர் ஆதிதி நயார் கூறுகையில் “பிப்ரவரி மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதற்கு புவிஅரசியல் சூழலைக் காரணமாகக் கூறலாம். ஆனால், மார்ச் மாதத்தில் ஏற்றுமதி இன்னும் மோசமாகும், இறக்குமதிச் செலவு இன்னும்கூடுதலாகும். இதனால் வர்த்தகப் பற்றாக்குறை மேலும் வரிவடையும். ரஷ்யாஉக்ரைன் இடையே நடக்கும் போர்தான் கமாட்டி விலை மற்றும் கச்சா எண்ணெய் விலையைத்தீர்மானிக்கும்” எனத் தெரிவித்தார்