விவசாயிகளே கவனம்! இ-கேஒய்சியைபதியாவிட்டால்ரூ.2ஆயிரம் கிடைக்காது: எப்படி இணைப்பது?
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் விசாயிகள் தங்களின் கேஒய்சி விவரங்களை பதிவு செய்யாவிட்டால், 11-வது தவணையாக நிதியுதவி பெறமுடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் விசாயிகள் தங்களின் கேஒய்சி விவரங்களை பதிவு செய்யாவிட்டால், 11-வது தவணையாக நிதியுதவி பெறமுடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு, பிப்ரவரி 24ஆம் தேதி பிஎம்-கிசான் திட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு கொண்டுவந்தது. இதன்படி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி 4 மாதங்களுக்கு ஒருமுறை 3 தவணைகளாகப் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்ட 10-வது தவணையில் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.20 ஆயிரம் கோடி நிதியுதவி நேரடியாக வரவு வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை ரூ.1.60 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 11-வது தவணைத் திட்டம் வரும் ஏப்ரல் மாதம் வழங்கப்பட உள்ளது. அதற்குள்ளாக நிதியுதவி பெறத் தகுதியான விவசாயிகள் தங்களின் கேஒய்சி விவரங்களை பிஎம்கிசான் இணையதளத்தில் பதிவு செய்யாவிட்டால் பதிவு செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் 11-வது தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படாது.
இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் விவசாயிகள், இனிமேல் புதிதாக சேரும் விவசாயிகல் பிஎம் கிசான் அதிகாரபூர்வ இணையதளமான pmkisan.gov.in சென்று தங்கள் ஆதார், வங்கிக்கணக்கு உள்ளிட்ட விவரங்களைச் சேர்க்க வேண்டும்.
கேஒய்சியை எவ்வாறு சேர்ப்பது?
- முதலில் pmkisan.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று லாகின் செய்ய வேண்டும்
- இணையதளத்தில் “ இ-கேஒய்சி” எனும் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
- புதிதாக ஒருபக்கம் திறக்கும்.அதில் விவசாயி தனதுஆதார் எண், கேப்சா வார்த்தைகளைப் பதிவு செய்து கிளிக் செய்ய வேண்டும்
- புதிய பக்கத்தில் விவசாயி தனது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.
- மொபைல் எண்ணைப் பதிவு செய்தபின், செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண் வரும்.
- திரையில்இருக்கும் பகுதியில் ஓடிபி எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்
- ஓடிபி எண்ணை பதிவு செய்தபின் பிஎம் கிசான் இ-கேஒய்சி வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது என்ற செய்தி வருவதை உறுதி செய்ய வேண்டும்