2022-க்குள் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு செய்யப்படும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத கடைசியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதை பிப்ரவரி 1-ம் தேதிக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2017-ல் மாற்றியது. மத்திய பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2020-21-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

இந்த மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், வேளாண் சந்தையை தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயம் தொடர்பான 3 சட்டங்களை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும். வேளாண்துறையை முன்னேற்ற 16 கட்டங்களாக திட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

மேலும், பண்ணை தொழிலை தனியார் நிறுவனங்கள் நடத்தும் விதமாக மறுசீரமைப்பு செய்யப்படும். உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட 100 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சூரிய மின்சக்தியில் இயங்கும் மோட்டார்களை அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு உதவி செய்யப்படும். தரிசு நிலங்கயில் சூரிய மின்னுற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் பற்றாக்குறையை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.