fake currency notes : demonetisation : fake notes:  counterfeit notes rise more than 10% : ரிசர்வ் வங்கி கடந்த வாரம் வெளியிட்ட 2021-22ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் நாட்டில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் எண்ணிக்கை 100 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது என்றும் ரூ.2000 கள்ளநோட்டுகள் 50 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி கடந்த வாரம் வெளியிட்ட 2021-22ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் நாட்டில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் எண்ணிக்கை 100 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது என்றும் ரூ.2000 கள்ளநோட்டுகள் 50 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டில் கள்ளநோட்டுகளை ஒழிக்க கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்னஆயிற்று என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை 2021-22ம் நிதியாண்டுக்கான ஆண்டறி்க்கையை வெளியிட்டது. அதில், “ ரூ.500 கள்ள நோட்டுகள் எண்ணிக்கை 101.9 சதவீதத்துக்கும்ம மேல் அதிகரித்துள்ளது. அதாவது 2020-21ம் ஆண்டில் 39,543 எண்ணிக்கையில் இருந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள் எண்ணிக்கை 2021-22ம் ஆண்டில் 79,699 ஆக அதிகரித்துள்ளது. ஏறக்குறைய101 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதேபோல 2000 ரூபாய் கள்ளநோட்டு எண்ணிக்கை 54.16 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2020-21ம் ஆண்டில் 8,798 என்ற எண்ணிக்கையில் இருந்த 2ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு 2021-22ம் ஆண்டில் 13,604 ஆகஅதிகரி்த்துள்ளது. 

புதிய வடிவிலான ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வெளியிட்டபின் கள்ள நோட்டுகள் எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்துள்ளது. அதாவது, ரூ.10நோட்டு 16.4 சதவீதமும், ரூ.20 நோட்டு 16.5 சதவீதமும், ரூ.200 நோட்டு 11.7 சதவீதமும், ரூ.2000 நோட்டு 54.6 சதவீதமும், ரூ.500 நோட்டு 101.9 சதவீதமும் உயர்ந்துள்ளன.

ஆனால், ரூ.50 நோட்டுகளில் கள்ளநோட்டு எண்ணிக்கை 28 சதவீதமும், ரூ.100 நோட்டுகளில் 16 சதவீதமும் குறைந்துள்ளது” என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆனால், கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டுவந்தபோது, கூறிய காரணங்களில் முக்கியமானது கள்ளநோட்டுகள் ஒழிக்கப்படும் என்பதாகும். ஆனால், தற்போது கள்ளநோட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. 

Scroll to load tweet…

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கிடைத்த துரதிர்ஷ்டமான வெற்றி, இந்தியப் பொருளாதாரத்தை நாசமாக்கியதுதான்” எனத் தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரீக் ஓ பிரையன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நமஸ்காரம் பிரதமர் மோடி, பணமதிப்பிழப்பு நினைவிருக்கிறதா. பணமதிப்பிழப்பு நாட்டில் கள்ளநோட்டுகளை ஒழிக்கும் என்றீர்களே. ஆனால், ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையில் கள்ளநோட்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளதே” எனத் தெரிவித்துள்ளார்.