ஆதார் கார்டு மூலம் 2% வட்டியில் கடன் வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் போலியானது என பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் PIB உறுதி செய்துள்ளன. இதுபோன்ற தகவல்களை நம்பி தனிப்பட்ட தகவல்களை இழக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை பலர் கண்மூடித்தனமாக நம்பும் சூழலே தற்போது இருக்கிறது. அதனாலேயே சைபர் கிரைம் அதிக அளவில் நடப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இணையத்தில் பரவும் பல்வேறு தகவல்களை நம்பும் பலரும் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை நொடிப்பொழுதி இழக்கின்றனர்.

தற்போது ரதான் மந்திரி திட்டத்தின் கீழ் ஆதார் கார்ட் மூலமாக ஆண்டுக்கு 2% வட்டியில் கடன் வழங்கப்படுகிறது” என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.இந்த செய்தியை பலரும் நம்புவதுடன் அதனை வாட்ஸ்அப் மற்றும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் குறிப்பிட்டுள்ள குறைந்த வட்டி வீதத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தவர்களும் உள்ளனர். ஆனால், இந்த செய்தி குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) உண்மைத்தன்மையை வெளியிட்டுள்ளது. இது போலியான செய்தி என உறுதிபடுத்தியுள்ளது

இணையத்தில் பரவும் போலி செய்தி

Press Information Bureau (PIB) எனும் மத்திய தகவல் துறை, சமூக ஊடகங்களில் பரவும் இந்த போலி செய்தியைப் பகிர்ந்துள்ளது. “ஆதார் கார்டு மூலம் ஆண்டுக்கு 2% வட்டியில் கடன் வழங்கப்படுகிறது” எனக் கூறும் அந்த செய்தி முற்றிலும் பொய்யானது எனவும், PNB தன்னுடைய உண்மைத் தகவல் பிரிவின் மூலமாக இதைத் திருத்தி அறிவித்துள்ளது. இந்த போலியான தகவல்களை வைத்து சிலர் உங்களின் தனிப்பட்ட தகவல்களை (பான் கார்டு, வங்கி கணக்கு, ஆதார் விவரங்கள்) திருடும் முயற்சி செய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி எச்சரிக்கை

பஞ்சாப் நேஷனல் வங்கி வங்கி இது போன்ற திட்டங்களை நடத்தவில்லை என்றும், தற்போது வங்கி ISO திட்டத்தை மட்டுமே மத்திய அரசின் திட்டமாக இயக்குகிறது என்றும் விளக்கியுள்ளது. சமூக ஊடகங்களில் வரும் தவறான லிங்குகள் அல்லது தொலைபேசி எண்களை அழைத்தால் உங்கள் தனிப்பட்ட விவரங்களை இழக்கும் அபாயம் உள்ளது.

PNB மற்றும் PIB என்ன சொல்கின்றன?

PNB (பஞ்சாப் நேஷனல் வங்கி) இந்த தகவலை முழுமையாக தவறானது என அறிவித்துள்ளது. PIB (Press Information Bureau) தனது "Fact Check" பிரிவில் இதை பொய்யான செய்தி என்று உறுதியாக கூறியுள்ளது. இது போன்ற தகவல்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் முயற்சி ஆக இருக்கலாம்.

தகவல் தொடர்பாக எச்சரிக்கை

Press Information Bureau மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி மக்கள் அனைவரையும் இந்த மாதிரியான இணையச் சூழ்ச்சிகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலோ வங்கியின் நேரடி அலுவலகங்களிலோ மட்டுமே சரிபார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். ஆதார் கார்டு மூலம் 2% வட்டியில் அரசு கடன் வழங்கும் என்ற செய்தி பொய்யானது, அதனை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என நமக்கு தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

இத்தகைய செய்திகளை நம்ப வேண்டாம்.அரசு திட்டங்கள் குறித்து அறிய, அதிகாரப்பூர்வ வங்கிகள் அல்லது அரசு இணையதளங்களை மட்டும் பயன்படுத்துங்கள். எந்த லிங்குகளையும் கிளிக் செய்ய வேண்டாம். சந்தேகமிருந்தால், வங்கி அல்லது அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.