Asianet News TamilAsianet News Tamil

esi hospital : 2022ம் ஆண்டுக்குள் நாடுமுழுவதும் ESI திட்டத்தை விரிவுபடுத்த முடிவு: மத்திய அரசு தி்ட்டம்

esi hospital:2022ம் ஆண்டுக்குள் தொழிலாளர்ளுக்கான இஎஸ்ஐ திட்டத்தை நாட்டின் 744 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

esi hospital :  Govt plans to extend ESI scheme across country by end of 2022
Author
New Delhi, First Published Jun 20, 2022, 1:00 PM IST

2022ம் ஆண்டுக்குள் தொழிலாளர்ளுக்கான இஎஸ்ஐ திட்டத்தை நாட்டின் 744 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகம்(இஎஸ்ஐசி) கடந்த 1952ம் ஆண்டு, பிப்ரவரி 24ம் தேதி தொடங்கப்பட்டது. டெல்லி, கான்பூரில் 25 ஆயிரம் ஊழியர்களுடன் தொழிலாளர் மருத்துவக் காப்பீடு தொடங்கப்பட்டது. தற்போதுஇந்தத் திட்டம் 443 மாவட்டங்களில் செயல்படுகிறது.

esi hospital :  Govt plans to extend ESI scheme across country by end of 2022

 153 மாவட்டங்களில் பகுதியாக செயல்படுகிறது. 148 மாவட்டங்களில் இஎஸ்ஐ திட்டம் ஏதும் இல்லை. ஆனால், 2022ம் ஆண்டு இறுதிக்குள் நாடுமுழுவதும் இஎஸ்ஐ திட்டத்தை கொண்டுவர மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

மத்திய தொழிலாளர் நலன் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் எஸ்ஐயின் 188வது கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, “ நாட்டில் தற்போது 443 மாவட்டங்களில் இஎஸ்ஐ திட்டம் செயல்படுகிறது. இதை நாடுமுழுவதும் 744 மாவட்டங்களுக்கும் 2022ம் ஆண்டு இறுதிக்குள் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இஎஸ்ஐ 154 மருத்தவமனைகள் மூலம் மருத்துவ வசதிகளை தொழிலாளர்களுக்கு வழங்குகிறது. இதில் 1570 சிறிய டிஸ்பென்சரிகளும், 76 டிஸ்பென்சரி மற்றும் கிளை அலுவலகங்களும் செயல்படுகின்றன. 

esi hospital :  Govt plans to extend ESI scheme across country by end of 2022

2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி இஎஸ்ஐ மூலம் 3.40 கோடி பேர் உள்நோயாளிகளாக இருந்து மருத்துவ உதவி பெற்றுள்ளனர், 13.1 கோடிபேர் வெளிநோயாளியாக இருந்து உதவி பெற்றுள்ளனர். 

மேலும், புதிதாக 100 படுக்கைகளுடன் கூடிய 23 மருத்துவமனைகள் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை பிரதான்மந்திரிஜன் ஆரோக்கியா திட்டத்தில் கிடைக்கவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

esi hospital :  Govt plans to extend ESI scheme across country by end of 2022

கர்நாடக மாநிலத்தில் தலா 2 மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. ஆந்திரா, சத்தீஸ்கர், குஜராத், கோவா, மத்தியப்பிரதேசம், ஒடிசா, மே.வங்கத்தில் புதிதாக தலா ஒரு இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்ககப்பட உள்ளது. 

மகாராஷ்டிராவில் 48 மருந்ததகங்கள், டெல்லியில் 12, ஹரியாணாவில் 2 மருந்தகங்களும் புதிதாக அமைக்கப்பட உள்ளன 
10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளில் இஎஸ்ஐ திட்டம் பொருந்தும். அதுமட்டுமல்லாமல் மாதத்துக்கு ரூ.21 ஆயிரம் வரை ஊதியம் பெற்றாலே இஎஸ்ஐ பொருந்தும். நிறுவனங்கள் 3.25 சதவீதமும், ஊழியர்கள் 0.75 சதவீதம் பங்களிப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios