வீட்டு பணிப்பெண்களுக்கும் இனி  இஎஸ்ஐ  பிடித்தம்......!!! அமலாகிறது  புதிய  சட்டம்...!!!

 வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் பணிப்பெண்களும் கூட , இனி இஎஸ்ஐ மருத்துவ வசதி   பெரும் திட்டத்தை , மத்திய  அரசு விரைவில்  கொண்டு  வர உள்ளது.   

அதாவது, அலுவலக ஊழியர்கள், நிறுவன தொழிலாளர்களுக்கு அமலில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ வசதி , சாதாரண வேலையில் இருப்பவர்களும் பெரும்  வகையில்  சட்டம்  வரவுள்ளது.

இது குறித்து,  பேசிய மத்திய தொழிலாளர் நல  அமைச்சர் பண்டாரு தத்தேத்ரேயா, இந்த திட்டத்தின் படி, முதல் கட்டமாக டெல்லி, ஐதராபாத்தில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இந்த  சட்டத்தை  முறைப்படுத்த, தொழிலாளர் நலத்துறை, மனித வள மேம்பாடு, சுகாதாரம், பெண்கள் குழந்தை நலம் ஆகிய  அமைச்சகங்களின் இணை செயலாளர்கள் அடங்கிய குழு நியமிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த  அற்புத  திட்டம்  மிக  விரைவில்  அமல்படுத்தப்படும்  என  எதிர்பார்கப்படுகிறது.