Asianet News TamilAsianet News Tamil

EPFO: pf withdrawl: பிஎப்(PF) கணக்கிலிருந்து அவசரத் தேவைக்கு எப்படி பணத்தை எடுப்பது? அடிப்படைத் தகவல்கள்

epfo : pf withdrawl :தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(EPF) என்பது தொழிலாளர் ஒருவர் வாழ்க்கையில் முக்கியமான கட்டத்தைத் தீர்மானிக்கும் நிதியாகும். ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதம் பிடிக்கப்பட்டு இபிஎப்ஓ கணக்கில் சேமிக்கப்படும். பணியாற்றும் நிறுவனமும் அதே 12 சதவீதத்தை டெபாசிட் செய்ய வேண்டும். 

epfo : pf withdrawl : How To Withdraw PF (Provident Fund): Steps And Rules Explained
Author
Mumbai, First Published Jun 23, 2022, 3:07 PM IST

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(EPF) என்பது தொழிலாளர் ஒருவர் வாழ்க்கையில் முக்கியமான கட்டத்தைத் தீர்மானிக்கும் நிதியாகும். ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதம் பிடிக்கப்பட்டு இபிஎப்ஓ கணக்கில் சேமிக்கப்படும். பணியாற்றும் நிறுவனமும் அதே 12 சதவீதத்தை டெபாசிட் செய்ய வேண்டும். 

epfo : pf withdrawl : How To Withdraw PF (Provident Fund): Steps And Rules Explained

பிஎப் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்கள் ஆன்-லைன்மூலமே பணத்தை எடுக்க முடியும். இதற்காக e-SEW எனும் போர்டலை இபிஎப்ஓ அமைப்பு உருவாக்கியுள்ளது. தொழிலாளர்கள் தாங்கள் ஓய்வு பெற்றபின் தங்களின் கணக்கில் இருக்கும் ஒட்டுமொத்தப் பணத்தையும் எடுக்கலாம். அல்லது அவசரத் தேவை கருதியும், அவசரகாலசெலவுக்காகவும் பிஎப் பணத்தையும் எடுக்கலாம்.

பிஃஎப் பணத்தை எடுப்பதில் முக்கிய அம்சங்கள்

இபிஎப் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளருக்கு யுஏஎன் எண் வழங்கப்பட்டிருக்கும். அந்த எண்ணுடன் ஆதார் கார்டையும் இணைக் வேண்டும். இந்த விவரங்களை இபிஎப்ஓ இணையதளம் மூலமோ அல்லது umang  மொபைல் செயலியிலோ பார்க்கலாம்.

பிஎப் பணத்தை திரும்பப் பெறுவதற்கு முன்பு கேஒய்சி தொடர்பான விவரங்களை முடிப்பது முக்கியமாகும். கேஒய்சிக்கு பான் கார்டும் தேவைப்படும். இந்த விவரங்களை இபிஃஎப்ஓ முடித்தபின்புதான் பிஎப் கணக்கு சரிபார்க்கப்பட்டதாக செய்தி கிடைக்கும்.

epfo : pf withdrawl : How To Withdraw PF (Provident Fund): Steps And Rules Explained

பிஎப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதில் முக்கிய அம்சங்கள்

1.    யுஏஎன் போர்டலில், <https://unifiedportal- mem.epfindia.gov.in/memberinterface/>   என்ற தளத்துக்கு செல்ல வேண்டும்

2.    UAN மற்றும் பாஸ்வேர்டோ வைத்து லாகின் செய்ய வேண்டும். அதன்பின் கேப்ட்சா கோடை டைப் செய்து உள்ளே செல்ல வேண்டும்.

3.    ஆன்-லைன் சர்வீஸ் என்ற பகுதி இருக்கும். அதை தேர்வுசெய்து, கிளைம் என்ற படிவத்தை இழக்க வேண்டும்(ஃபார்ம்-31,19&10C)

4.    அடுத்த திரையில் வங்கிக்கணக்கு எண்ணைப் பதிவு செய்து, வெரிபை என்பதை கிளிக் செய்யவேண்டும்

5.    அதில் ஆம் என்ற  பட்டனை அழுத்த வேண்டும்

epfo : pf withdrawl : How To Withdraw PF (Provident Fund): Steps And Rules Explained

6.    இந்த பணி முடிந்தபின், ப்ரொசீட் ஆன்-லைன் க்ளைம் என்ற வாசகம் வரும். அதாவது ஆன்-லைனில் கோரலாம். 

7.    அதில் உள்ள க்ளைம் ஃபார்மில், நான் குறிப்பிட்ட தேவைக்காக விண்ணப்பிக்கிறேன் என பதிவிட வேண்டும். 

8.    பிஎப் அட்வான்ஸ்(ஃபாம்31) மூலம் உங்கள் பணத்தைப் பெறலாம். 

epfo : pf withdrawl : How To Withdraw PF (Provident Fund): Steps And Rules Explained

9.    முன்பணத்தின் நோக்கம், தேவையான தொகை மற்றும் பணியாளரின் முகவரியை வழங்க வேண்டும். 

10.    சான்றிதழில் கிளிக் செய்து உங்கள் விண்ணப்பத்தை சப்மிட் செய்ய வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios