2021-22-ம் நிதியாண்டுக்கான இபிஎஃப்ஓ வட்டி வீதம் உயர்த்தப்படுவது குறித்து குறித்து இபிஎஃப்ஓ அமைப்பு கவுகாத்தியில் மார்ச் 4 மற்றும் 5ம் தேதி கூடி விவாதிக்கிறது. 

2021-22-ம் நிதியாண்டுக்கான இபிஎஃப்ஓ வட்டி வீதம் உயர்த்தப்படுவது குறித்து குறித்து இபிஎஃப்ஓ அமைப்பு கவுகாத்தியில் மார்ச் 4 மற்றும் 5ம் தேதி கூடி விவாதிக்கிறது. 

இதுவரை வந்துள்ள முதலீடுகள், கணக்குகள் ஆகியவை குறித்து நிதி முதலீடு மற்றும் தணிக்கைக் குழு இன்று பிற்பகலுக்குப்பின் ஆலோசிக்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூடிய இபிஎஃப்ஓ வாரியம் 2020-21ம் ஆண்டுக்கான வட்டி வீத்தை 8.5% என நிர்ணயித்தது. இந்த வட்டி வீதம் அதற்கு முந்தைய ஆண்டில் இருந்ததைப்போன்றே தொடர்ந்துத. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு வட்டி குறைவு இதுவாகும்.

இந்த சூழலில்தான் மார்ச் 4,5 தேதிகளில் கூடும் இபிஎஃப்ஓ வாரியக் கூட்டத்தில் வட்டிவீதம் உயர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 23.59 கோடி கணக்கு வைத்துள்ள தொழிலாளர்களின் சேமிப்புக்கு 2020-21ம் ஆண்டில் 8.50 %வட்டி செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிவரை 56.79 செட்டில்மெண்ட்களை பிஎஃப் வாரியம் முடித்துள்ளது. பிஎஃப் பணத்திலிருந்து கடன் பெறும் திட்டத்தின் மூலம் இதுவைர ரூ.14 ஆயிரத்து310 கோடி வழங்கப்பட்டுள்ளது.

2021-22ம் ஆண்டிலிருந்து பிஎஃப் கணக்கில் அதிகமான பங்களிப்பு செய்பவர்களுக்கு வரிவிதிக்கும் மத்திய அரசின் அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, வரிவிதிக்கப்படக்கூடிய பிஎஃப் கணக்குகள், வரிவிதிப்புக்கு உட்படாத பிஎஃப் கணக்குகள் என பிரிக்கப்பட உள்ளன. 

அதாவது, ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு அதிகமாக பிஎஃப் பங்களிப்பு செய்வருக்கு வரிவிதிக்கப்படுகிறது. அதற்கு குறைவாக பங்களிப்பு செய்பவர்களுக்கு வரியில்லை. அதிகமான ஊதியம் பெறுவர்கள் அரசின் சலுகைகளை பெறுவதைத் தடுக்கும் நோக்கில் இது கொண்டுவரப்படுகிறது

பி.எஃப் பணியாளர்களின் ரூ. 2.5 லட்சத்திற்கு மேலான பங்களிப்பு இருந்தால் வரிக்காக வருமானவரி தாக்கல்படிவத்தில் புதிதாக 9டி இணைக்கப்பட்டுள்ளது. புதிய விதி சிறிய மற்றும் நடுத்தர வரி செலுத்துவோரை பாதிக்காது. இது முதன்மையாக அதிக வருமானம் பெறும் ஊழியர்களை பாதிக்கும்.