Big announcement from EPFO for pensioners :EPFO Alert :இபிஎஸ்95 திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் வாழ்நாள் சான்றிதழை எப்போதுவேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம் என்று இபிஎப்ஓ அமைப்பு அனுமதியளித்துள்ளது.

இபிஎஸ்95 திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் வாழ்நாள் சான்றிதழை எப்போதுவேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம் என்று இபிஎப்ஓ அமைப்பு அனுமதியளித்துள்ளது.

ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழ் (லைப் சர்டிபிகேட்) காலக்கெடு முடிந்துவிட்டது, புதிய சான்றிதழ் தாக்கல் செய்ய காலக்கெடுவும் முடிந்துவிட்டதாக நினைத்து கவலைப்பட வேண்டாம். 

ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை எப்போது தாக்கல் செய்கிறார்களோ அதிலிருந்து ஓர் ஆண்டுக்கு அது செல்லும் என்று கணக்கில் கொள்ளப்படும்.

இது குறித்து இபிஎப்ஓ அமைப்பு ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ இபிஎஸ்95 திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை எப்போதுவேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம். 

Scroll to load tweet…

சான்றிதழை தாக்கல் செய்த நாளில் இருந்து ஓர் ஆண்டுக்கு அது செல்லுபடியாகும்” எனத் தெரிவித்தார்.
வாழ்நாள் சான்றிதழ் அல்லது ஜீவன் பிரம்மன் பத்திரம் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமானதாகும். அதாவது ஓய்வூதியம் பெறுவோர் உயிருடன் இருக்கிறாரா என்பதை கண்டறிய இந்த சான்றிதழ் முக்கியமாகும்.

எங்கு தாக்கல் செய்யலாம்

இந்த வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியதாரர்கல் வங்கிகளிலும், பொதுச் சேவை மையம், அஞ்சல்நிலையம், அஞ்சல் ஊழியர், உமாங் செயலி, அல்லது அருகில் இருக்கும் இபிஎப்ஓ அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம்.

Scroll to load tweet…

தேவையான ஆவணங்கள்
வாழ்நாள் சான்றிதழைத் தாக்கல் செய்யும் ஓய்வூதியதாரர்கள் அதோடு சில ஆவணங்களையும் இணைத்து தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் பிபிஓ எனப்படும் ஓய்வூதிய பேமெண்ட் உத்தரவு, ஆதார் எண், வங்கிகணக்கு விவரம், ஆதாருடன் மொபைல் எண் இணைக்கப்பட்ட விவரம் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.ஆன்லைன் மூலமும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழைத் தாக்கல்செய்யலாம்.