திடீர் நிதித் தேவைகளுக்கு எமர்ஜென்சி நிதி அவசியம். மாத வருமானத்தில் இருந்து ஒரு பகுதியைத் தனியாகச் சேமித்து, எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்க தயாராக இருங்கள்.
இந்தியாவில் பெரும்பாலானோர் மாத சம்பளத்திலேயே தங்களது வாழ்க்கையை நடத்துகிறார்கள். மற்ற வருமானம் இல்லாததால், சம்பளம் வந்தவுடன் கடன், EMI, பில், அத்தியாவசிய செலவுகள் அனைத்தையும் கட்டி விட்டு, அடுத்த சம்பளத்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகிறது. இதற்கிடையில் உடல்நலக் குறைவு, வாகனப் பழுது, குடும்ப அவசரங்கள் போன்ற எதிர்பாராத செலவுகள் வந்தால், பலர் கடன் எடுத்துச் சமாளிக்க வேண்டும் சூழ்நிலை ஏற்படுகிறது.
எமர்ஜென்சி நிதி
திடீர் நிதி தேவைகளுக்காக முன்கூட்டியே சேமித்து வைக்கும் பணமே எமர்ஜென்சி நிதி ஆகும். மருத்துவ செலவுகள், வாகன பழுது, அவசர பயணம் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில், இந்த நிதி உதவும். அக்காலங்களில், தாய்மார்கள் சிறிதளவு பணத்தைச் சேமித்து, நெருக்கடி நேரங்களில் பயன்படுத்துவார்கள். அதே பழக்கம் இன்றும் முக்கியமானது என்று தெளிவாக தெரிகிறது.
எப்படி சேமிப்பது?
உங்கள் வருமானத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு சதவீதத்தை அல்லது குறிப்பிட்ட தொகையை தனியாக வைக்க வேண்டும். திடீர் தேவை வைக்கும் இந்தத் தொகை, உங்கள் திறனைப் பெற வைக்கிறது. குறைந்த அளவில் தொடங்கி, படிப்படியாக அதிகரிக்கலாம். தொடர்ச்சியாக சேமிப்பது மிக முக்கியமானது ஆகும்.
தனி கணக்கு அவசியம்
எமர்ஜென்சி நிதிக்கென ஒரு தனி வங்கிக் கணக்கைத் தொடங்குங்கள். இதை சாதாரண செலவுகளுக்கு பயன்படுத்தாமல், அவசரச் செலவுகளுக்கு மட்டும் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்தால், தேவையான நேரத்தில் அந்தப் பணம் தயாராக இருக்கும்.
தொடர்ந்து சேமிப்பு
எமர்ஜென்சி நிதியை ஒருமுறை பயன்படுத்தினால், உடனே மீண்டும் அந்த அளவு பணத்தைச் சேமிக்க வேண்டும். இதனால் எப்போதும் நிதி பாதுகாப்பாக இருக்கும். எதிர்பாராத சூழ்நிலைகள் எப்போது வந்தாலும், கடன் சுமையின்றி சமாளிக்க முடியும்.
